பொது செய்தி

தமிழ்நாடு

கறுப்பு ஸ்டிக்கருடன் வாகனங்கள் உலா; கண்டுகொள்ளாத போலீசார்

Added : செப் 16, 2020
Share
Advertisement

கரூர்: கறுப்பு ஸ்டிக்கர்களுடன் வாகனங்கள் உலா வருவதை, கரூர் போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வதில்லை.


வாகனங்களில், கண்ணாடிகளுக்கு கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டும் போது, முன் மற்றும் பின் பக்கம், பக்கவாட்டு பகுதிகள், 70 சதவீதம் தெளிவாக தெரிய வேண்டும் என, விதிமுறை உள்ளது. ஆனால், விதிமுறைகளை மீறி கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படுவதால், வாகனங்களில் பயணம் செய்பவர் யார் என்பது தெரிவதில்லை. இதை பயன்படுத்தி, சட்டவிரோத செயல்கள் நடக்க வாய்ப்பு அதிகம். வாகன கண்ணாடிகளில் உள்ள, கறுப்பு நிற பிலிம்களை அகற்ற வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பெயரளவில் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். போக்குவரத்து போலீசார், அவ்வப்போது சோதனை நடத்தி அபராதமும் விதிக்கின்றனர். வாகனங்களில் வருபவர்கள் அரசியல் பிரமுகர், அரசு அதிகாரிகள் என்றால் கண்டுகொள்வதில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X