பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு சித்தா பிரிவில் நூலக வசதி: ஆய்வில் கலெக்டர் தகவல்

Added : செப் 16, 2020
Share
Advertisement

கரூர்: ''கொரோனா சிறப்பு சித்தா பிரிவில், நோயாளிகளுக்காக நூலக வசதி செய்யப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் அன்பழகன் கூறினார்.


கரூர், அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள, கொரோனா தடுப்பு சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை பிரிவிற்கு, கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்துதல் தொடர்பாக, கலெக்டர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் கூறியதாவது: மிதமான அறிகுறிகளுடன், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு, 15 மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட கபசுர குடிநீர், ஒன்பது மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட சிறப்பு மூலிகை தேநீர், நிலவேம்பு குடிநீர், ஆடாதொடை கஷாயம், கற்பூரவள்ளி, ஆடாதொடை, குப்பைமேனி கஷாயம், தாளிசாதி சூரணம், அமுக்கரா சூரணம் உள்ளிட்டவை தேவைப்படும் நபர்களுக்கு, போதிய உணவு இடைவெளியில் வழங்கப்படும். மேலும், நொச்சிஇலை, தழுதாலை கொண்டு ஆவிபிடிக்கும் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மூச்சுப்பயிற்சி, யோகா பயிற்சி உள்ளிட்டவை சித்த மருத்துவ அலுவலர்களால் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நோயாளிகள், படிப்பதற்கு ஏதுவாக பல்வேறு நூல்கள் அடங்கிய குறுநூலகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார். ஆர்.டி.ஓ., பாலசுப்பிரமணியன், நகராட்சி ஆணையர் சுதா, தாசில்தார் அமுதா, சித்த மருத்துவ அலுவலர்கள் கவிதா, மனோகரன், பர்வேஷ்பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X