பொது செய்தி

தமிழ்நாடு

இந்திய ராணுவ கல்லூரியில் சேர செப்.,30க்குள் விண்ணப்பிக்கலாம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன், வெளியிட்ட அறிக்கை: டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில், 2021 ஜூலை பருவத்தில் சேருவதற்கான தேர்வு, டிச., 1, 2ல் சென்னையில் நடக்கிறது. எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு ஆகிய இரண்டும் கொண்டதாக இருக்கும். எழுத்துத் தேர்வு, ஆங்கிலம், கணக்கு மற்றும் பொது அறிவு ஆகிய தாள்கள் கொண்டது. கணக்குத்தாள் மற்றும் பொது அறிவுத் தாள் ஆகியன ஆங்கிலத்தில் அல்லது ஹிந்தியில் விடையளிக்கப்பட வேண்டும். நேர்முகத் தேர்வானது விண்ணப்பதாரர்களின் அறிவுக்கூர்மை, தனித்தன்மை போன்றவற்றை ஆராய்வதாக இருக்கும். எழுத்துத் தேர்வின் அடிப்படையில், தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்களுக்கு மட்டுமே, 2021 ஏப்.,6ல் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். தேர்விற்கான விண்ணப்ப படிவத்திற்கு, கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி, டேராடூன், உத்ரகாண்ட் - 248 003 என்ற முகவரிக்கு விரைவு அஞ்சல் வாயிலாக பெறலாம். இதற்கு, கல்லூரி பெயரில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் (வங்கி குறியீடு 01576), பொதுப் பிரிவினர், 600 ரூபாய், தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பினர் ஜாதி சான்றுடன், 555 ரூபாய் கேட்புக் காசோலையை அனுப்பி வைக்க வேண்டும் அல்லது www.rimc.gov.in என்று இணையதள முகவரியில், தொகையை செலுத்தி பெற்று கொள்ளலாம். விண்ணப்பதாரர், பதினொன்றரை வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். அவர், ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள், (இரட்டையாக) தேர்வுக் கட்டுப்பாடு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் சாலை, பூங்கா நகர், சென்னை-600 003 என்ற முகவரிக்கு, செப்., 30க்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X