பொது செய்தி

தமிழ்நாடு

அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு

Added : செப் 16, 2020
Share
Advertisement

கரூர்: தொடர் மழை காரணமாக, அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு, நேற்று குறைக்கப்பட்டுள்ளது.


வங்கக்கடலில் நிலவும், காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக திருப்பூர், கரூர் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி, பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு, மழை காரணமாக நேற்று குறைக்கப்பட்டது. நேற்று முன்தினம் காலை, அணைக்கு வினாடிக்கு, 756 கன அடி தண்ணீர் வந்தது. ஆற்றில், 800 கன அடியும், கிளை வாய்க்காலில், 50 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 600 கன அடி தண்ணீர் வந்தது. ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் அளவு வினாடிக்கு, 800 கன அடியில் இருந்து, 600 கன அடியாக குறைக்கப்பட்டது. 90 அடி கொண்ட அணை நீர்மட்டம், 88.09 அடியாக இருந்தது.


* கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 6,922 கன அடி தண்ணீர் வந்தது. குறுவை சாகுபடிக்காக காவிரியாற்றில், 5,702 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 1,220 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X