பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., அமைப்பு சாரா சங்க முப்பெரும் விழா

Added : செப் 16, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் தான்தோன்றிமலையில், பா.ஜ., அமைப்புசாரா சங்கம் சார்பில், பிரதமர் மோடி பிறந்தநாள் உட்பட முப்பெரும் விழா, மாநில செயலாளர் மதுக்குமார் தலைமையில் நடந்தது. பின்னர், மாநில தலைவர் பாண்டிதுரை, நிருபர்களிடம் கூறியதாவது: இந்த சங்கம் வாயிலாக, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, 8.87 கோடி ரூபாய் நிதி உதவிகளை, மத்திய, மாநில அரசிடம் இருந்து பெற்று கொடுத்துள்ளோம். 67 ஆயிரம் பேரை பிரதமர் காப்பீடு திட்டத்தில் இணைத்துள்ளோம். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், காப்பீடு திட்டம், முத்ரா வங்கி கடன் உட்பட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. கரூர் நகராட்சியில், வாடகை வேன், ஆட்டோ நிறுத்த நிரந்தரமான இடம் ஏற்பாடு செய்து தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X