பொது செய்தி

தமிழ்நாடு

புதிய கல்லூரிக்கு விண்ணப்ப படிவம் வழங்கல்; இணை இயக்குனர் தகவல்

Added : செப் 16, 2020
Share
Advertisement

கரூர்: கடவூர் பகுதியில், அரசு கல்லூரி இல்லாததால், வெளியூர்களுக்கு உயர் கல்வி பயில செல்ல வேண்டி நிலை இருந்து வந்தது. கல்லூரி தொடங்க வேண்டும் என்ற, நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தரகம்பட்டியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடக்கப்படும் என, முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதன்படி, கல்லூரி கட்டவுள்ள இடத்தை, திருச்சி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் அறிவுடைநம்பி ஆய்வு மேற்கொண்டார். பின், அவர் கூறியதாவது: தற்காலிகமாக கல்லூரி, தரகம்பட்டியில் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செயல்படும். இங்கு, மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் வழங்கப்படும். நிதி ஒதுக்கப்பட்ட பின், தேர்வு செய்யப்பட்ட இடத்தில், கட்டுமான பணி தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார். கரூர் அரசு கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி, தரகம்பட்டி கல்லூரி முதல்வர் (பொ) கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X