சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

Added : செப் 16, 2020
Share
Advertisement

அரவக்குறிச்சி: சின்னதாராபுரம் அருகே ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். அணைப்பாளையத்தை சேர்ந்தவர் சின்ராஜ், 18. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மதியம், 2:30 மணியளவில் அப்பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் குளிப்பதற்காக சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக சுழலில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார். ஆற்றுக்கு சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அரவக்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்பகுதிக்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேர தேடலுக்கு பின், மாலை, 5:30 மணியளவில் சின்ராஜை சடலமாக மீட்டனர். சின்னதாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X