ரயில்வே பாலத்துக்கு கீழ் செல்பவர்களுக்கு கழிவுநீர் அர்ச்சனை: தடுப்பு அமைக்கலாமே

Added : செப் 16, 2020
Share
Advertisement

கரூர்: கரூரில், ரயில்வே மேம்பாலத்துக்கு கீழ், செல்பவர்களுக்கு கழிவுநீர் அர்ச்சனை கிடைப்பதால், மேம்பாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


கரூர் அருகே, பசுபதிபாளையம் ஐந்து சாலை அருகே, நெரூர் சாலையில் திருச்சி மற்றும் திண்டுக்கல் செல்லும் ரயில்வே இருப்பு பாதை உள்ளது. இதற்கு அடியில், நெரூர், வாங்கல் செல்ல சாலை அமைக்கப்பட்டு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. மேம்பாலத்தில் ரயில்கள் செல்கிறது. ஆனால், மேம்பாலத்தில் தடுப்பு சுவர்கள் இல்லை. இந்நிலையில், கரூரில் இருந்து திருச்சி மற்றும் திண்டுக்கல் மார்க்கத்தில் நாள்தோறும், 40க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன. மேம்பாலத்தின் கீழே உள்ள சாலை வழியாக வாங்கல், நெரூர், கோயம்பள்ளி உள்ளிட்ட ஊர்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். மேம்பாலத்தில் ரயில்கள் செல்லும் போது, பயணிகள் கழிவறையை பயன்படுத்தும் நேரத்தில், கழிவுநீர் பாலத்துக்கு கீழே செல்லும் பொதுமக்கள் மீது விழுகிறது. இதனால், மேம்பாலத்தில் ரயில் செல்லும் போது, பொதுமக்கள் ஒதுங்கி நின்று விடுகின்றனர். குறிப்பாக, பிரசித்தி பெற்ற நெரூர் சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானத்துக்கு, ரயில்வே மேம்பாலம் கீழே உள்ள சாலை வழியாகத்தான் பெரும்பாலும் செல்ல வேண்டும். அப்போது, ரயிலில் இருந்து கழிவுநீர் அர்ச்சனை கிடைப்பதால், பொதுமக்கள் சங்கடத்தில் நெளிகின்றனர். இதனால், பசுபதிபாளையம் ஐந்து சாலை அருகே உள்ள, ரயில்வே மேம்பாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்க கோரி, பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும், ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. எனவே, ஐந்து சாலை அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தில் தடுப்புகள் அமைக்க, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டி யது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X