பொது செய்தி

தமிழ்நாடு

வேலூர் சிறையில் கைதிகளை சந்திக்க அக்.,ல் உறவினர்களுக்கு அனுமதி

Added : செப் 16, 2020
Share
Advertisement

வேலூர்: வேலூர் மத்திய சிறையில், கைதிகளை சந்திக்க வரும் உறவினர்களுக்கு, அக்.,ல் அனுமதி அளிக்கப்பட உள்ளதாக சிறைத்துறையினர் கூறினர்.
வேலூர், தொரப்பாடியில் மத்திய ஆண்கள், பெண்கள் சிறைகள் தனித்தனியாக உள்ளன. கொரோனா ஊரடங்கால், கடந்த மார்ச் மாதத்திலிருந்த, கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், வீடியோ காலில் பேச அனுமதி வழங்கப்பட்டது. இதனால், குறைந்த எண்ணிக்கையிலேயே உறவினர்கள் பேசி வந்தனர். இந்நிலையில், கிளை சிறைகளில் கடந்த, 9ல் இருந்து கைதிகளை, உறவினர்கள் சந்தித்து பேச அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், வேலூர் மத்திய, பெண்கள் சிறையிலுள்ள கைதிகளை சந்திக்க அனுமதிக்கும்படி கோரிக்கை எழுந்தது.

இது குறித்து, வேலூர் மத்திய சிறை அதிகாரிகள் கூறியதாவது: கிளை சிறைகளில் கைதிகளை, உறவினர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். இதனால், யாருக்கேனும் கொரோனா பரவியுள்ளதா என, ஆய்வு செய்து வருகிறோம். உறவினர்கள் சந்திப்பால், கொரோனா பரவல் இல்லை என தெரியவந்தால், வரும் அக்.,ல் வேலூர் மத்திய ஆண்கள் மற்றும் பெண்கள் சிறைகளில், கைதிகளை சந்தித்து பேச, உறவினர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X