பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக எல்லையில் நடமாடும் சிறுத்தைகளால் மக்கள் அச்சம்

Added : செப் 16, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

திருப்பத்தூர்: தமிழக எல்லை, ஆம்பூர் அருகே, உணவுக்காக ஆந்திராவிலிருந்து வரும் சிறுத்தைகளின் நடமாட்டத்தால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.


திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கொத்தூர் காப்புக்காட்டையொட்டி பாலசுப்பிரமணியன், 56 என்பவருக்கு, சொந்தமான நிலம் உள்ளது. அங்கு, நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு அவர், தண்ணீர் பாய்ச்ச சென்றபோது, சிறுத்தை உறுமும் சத்தம் கேட்டுள்ளது. தகவலின்படி, ஆம்பூர் வனத்துறையினர், அவரது நிலத்தில் நேற்று ஆய்வு செய்தனர். அதில், சிறுத்தையின் கால் தடம் இருந்தது. விசாரணையில், அருகிலுள்ள ஆந்திரா மாநில வனப்பகுதி எல்லையில், சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பொதுமக்கள் யாரும் தனியாக வெளியே செல்ல வேண்டாம். இரவில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திருக்கும்படி, மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சிறுத்தை நடமாட்டத்தால் எல்லையோர பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து, ஆம்பூர் வனத்துறையினர் கூறுகையில், 'ஆந்திரா மாநிலம், சித்தூர், பலமனேர் வனப்பகுதியில், நூற்றுக்கணக்கான சிறுத்தைகள் உள்ளன. அவை, உணவுக்காக அருகிலுள்ள, தமிழக பகுதிக்குள் வருகின்றன. அவற்றை தடுக்க, அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thiru -  ( Posted via: Dinamalar Android App )
16-செப்-202014:10:10 IST Report Abuse
thiru விடுதலை சிறுத்தைகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X