ஜப்பான் பிரதமராக யோஷிஹைட் சுகா தேர்வு: மோடி வாழ்த்து

Updated : செப் 16, 2020 | Added : செப் 16, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
Japan, PM, YoshihideSuga, ShinzoAbe, Resigns, ஜப்பான், பிரதமர், யோஷிஹைட் சுகா

டோக்கியோ: ஷின்சோ அபேவின் ராஜினாமாவைத் தொடர்ந்து ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜப்பான் பிரதமராகப் பதவி வகித்து வந்த ஷின்சோ அபே, சில ஆண்டுகளாக குடல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இரண்டு முறை மருத்துவப் பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்குச் சென்று வந்த நிலையில், உடல் நிலையைக் காரணம் காட்டி பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக ஷின்சோ அபே அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஜப்பானின் ஆளும் கட்சியான லிபரல் டெமாக்ரடிக் கட்சி, அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழுவை செப்.,1ம் தேதி கூட்டியது. இதனைத் தொடர்ந்து கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.


latest tamil newsஇதில் ஷின்சோ அபேவின் அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருக்கும் யோஷிஹைட் சுகா சுமார் 377 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனையடுத்து யோஷிஹைட் சுகாவைப் பிரதமராகத் தேர்வு செய்து அந்நாட்டு பார்லிமென்ட் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அவர் விரைவில் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

71 வயது நிரம்பிய யோஷிஹிடே சுகா வடக்கு ஜப்பானைச் சேர்ந்த ஸ்டராபெர்ரி பயிரிடும் விவசாயி மகன். இவர், முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.


மோடி வாழ்த்துயோஷிஹைட் சுகாவுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவு: ஜப்பானின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள யோஷிஹைட் சுகாவுக்கு உளமார்ந்த வாழ்த்துகள். நாம் இருவரும் சேர்ந்து, நமது சிறப்பான பிராந்திய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லும் வாய்ப்பை எதிர்பார்த்துள்ளேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
ஜப்பானிய மொழியிலும், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-செப்-202017:21:37 IST Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) ஜப்பான் இந்தியாவின் நட்பு நாடு வாழ்த்துக்கள் புதிய பிரதமருக்கு
Rate this:
Cancel
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) யோவ் இந்துமத விரோதி சுடலை கான் இந்த சப்பான் பிரதமரின் சரியா உச்சரிச்சினா என் ஓட்டு ஒனக்கு தாய்யா திருட்டு திமுக வேணாம் போடா
Rate this:
Cancel
16-செப்-202015:20:51 IST Report Abuse
Janarthanan (குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும்) சுடலை க்கு வாய்ப்பு கொடுக்காதை வன்மையாக கண்டிக்கிறோம் ??? ஜப்பான் இதற்காக ரொம்ப வருத்த படும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X