பொது செய்தி

இந்தியா

இந்தியா- சீனா எல்லையில் ஊடுருவல் இல்லை: மத்திய அரசு

Updated : செப் 16, 2020 | Added : செப் 16, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
இந்தியா, சீனா, எல்லை, பாகிஸ்தான், ஊடுருவல், பார்லிமென்ட், உள்துறை, ராஜ்நாத், பாதுகாப்புத்துறை, நித்தியானந்த்ராய்,

புதுடில்லி: இந்தியா - சீனா எல்லையில், கடந்த 6 மாதங்களாக எந்தவிதமான ஊடுருவலும் நடக்கவில்லை என பார்லிமென்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜூனில் காஷ்மீரின் லடாக் அருகே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் அத்துமீறியது; நம் வீரர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதில் சீன வீரர்கள் கொடூரமாக தாக்கியதில் நம் வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.இரு தரப்பும் எல்லையில் ராணுவத்தை குவித்ததால் போர் மூளும் சூழல் ஏற்பட்டது.இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடந்த பேச்சை அடுத்து அமைதி திரும்பியது. ஆனாலும் சீன ராணுவம் தொடர்ந்து எல்லையில் அத்துமீறி வருகிறது. சமீபத்தில் ரஷ்யாவில் சீன ராணுவ அமைச்சரை நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். இருந்தாலும் எல்லையில் சீனாவின் வாலாட்டம் குறையவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக நேற்று பார்லிமென்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த விளக்கத்தில், 'எல்லை பிரச்னையில் சீன ராணுவம் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. எல்லையையும் இந்திய இறையாண்மையையும் பாதுகாப்பதற்கு எந்த ஒரு நடவடிக்கைக்கும் ராணுவம் தயாராக உள்ளது'' எனக்கூறியிருந்தார்.


latest tamil news



இந்நிலையில், எல்லையில் நடந்த ஊடுருவல் குறித்து ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த பதில்: காஷ்மீர் எல்லையில் கடந்த 3 ஆண்டுகளில், 594 முறை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்தனர். அதில் ,312 முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. ஆனால், கடந்த 6 மாதங்களாக, இந்தியா - சீனா எல்லையில் எந்தவிதமான ஊடுருவலும் நடக்கவில்லை. அதேகாலகட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் 47 முறை ஊடுருவல் நடந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

மற்றொருகேள்விக்கு அவர் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் கூறியுள்ளதாவது: பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள், சீக்கியர்கள், ஜெயின்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள், நீண்டகால விசாவில் இந்தியாவில் வந்து தங்கியுள்ளனர். அவர்களுக்கு அரசு பல்வேறு வசதிகளை செய்து கொடுத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
16-செப்-202015:54:29 IST Report Abuse
Lion Drsekar அவரவர்கள் தங்களது கடமைகளை சரியாக செய்வதால் ஒரு இடத்தில அப்படி மற்றொரு இடத்தில இப்படி, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X