நேபாளத்தில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவு

Updated : செப் 16, 2020 | Added : செப் 16, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

காத்மண்டு: நேபாளத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவாகியுள்ளது.



latest tamil news




நேபாளத்தின் தேசிய நிலநடுக்கவியல் மையம், 'நேபாளத்தில் இன்று (செப்., 16) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவாகியுள்ளது. ராம்சே, சிந்துபால்சோக் ஆகிய மாவட்டங்களிலும் நேபாளத்தின் கிழக்குப் பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. எனினும் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் விரைந்து நடைபெறுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



கடந்த 2015ம் ஆண்டு நேபாளத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.9 என்ற அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தில் 10,000 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
16-செப்-202020:35:26 IST Report Abuse
Tamilan அங்கு சீனர்கள் ஆதரவு பெற்ற மாவோயிஸ்டுகள் தான் ஆட்சி செயகின்றனர் . வெடிகுண்டுகள் வைத்து தகர்ப்பது , எதிர்கட்சிகளை சுட்டுத்தள்ளுவது எல்லாம் அரசாளும் கட்சிக்கு கைவந்த கலை . அதனால் இதைவிட அவர்கள் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும் ?.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X