பொது செய்தி

இந்தியா

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்.,30-ல் தீர்ப்பு

Updated : செப் 16, 2020 | Added : செப் 16, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
பாபர்மசூதி, வழக்கு, தீர்ப்பு, அத்வானி, முரளிமனோகர்ஜோஷி, உமாபாரதி, அயோத்தி, இடிப்பு, உச்சநீதிமன்றம், தீர்ப்பு,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வரும் 30ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த, 1992ம் ஆண்டு டிசம்பரில், உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில் இருந்த, பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் பா.ஜ., மூத்த தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், உமாபாரதி, வினாய் கத்தியார் உள்பட 32 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியேரை அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுவித்து 2001ல் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கை ஆக. 31க்குள் விசாரணையை முடிக்க அறிவுறுத்தி வழக்கை சி.பி.ஐ. தினசரி விசாரித்து வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் கடந்த ஜூலை 24 மற்றும் 24-ம் தேதிகளில் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், ஆஜராகி . நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் முன், அவர் அளித்த வாக்குமூலம், பதிவு செய்யப்பட்டது.


latest tamil news



இந்நிலையில், இந்த வழக்கில் வரும் 30ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அன்றைய தினம், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட எல்கே அத்வானி, முரளிமனோகர்ஜோஷி, கல்யாண் சிங், உமாபாரதி, வினய் கத்தியார் உள்ளிட்ட 32 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sudharman - chennai,இந்தியா
17-செப்-202011:31:55 IST Report Abuse
sudharman இனி வயசுக்கு வந்தா என்ன? வராட்டி என்ன ? அதான் எல்லாம் முடிஞ்சாச்சே
Rate this:
Cancel
16-செப்-202016:50:33 IST Report Abuse
Janarthanan (குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும்) பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்.,30-ல் தீர்ப்பு நியாயமாக முதலில் அங்கே இருந்த கோவிலை இடித்து பாபர் மசூதி கட்டியவர்களுக்கு தண்டனை கொடுத்து இருக்க வேண்டும்?? அங்கே மசூதி இல்லை என்றால் இந்த செயல் நடந்து இருக்காது அல்லவா ??? மாறாக சிக்குலர் இந்தியாவில் பாபர் பற்றி புத்தகத்தில் படிக்க வைக்க படுகின்றன ??? இந்துக்கள் செய்தது குற்றம் போல் சித்தரிக்க பட்டு உள்ளன ???
Rate this:
Cancel
கருப்பட்டி சுப்பையா (DMK திரும்ப வந்தா நாடு நாசமா போகும் ) - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி ,இந்தியா
16-செப்-202016:48:37 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா (DMK திரும்ப வந்தா நாடு நாசமா போகும் ) ஜெய் ஸ்ரீராம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X