பொது செய்தி

இந்தியா

50 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு - கடவுள் மீது பழிசுமத்தப் போகிறீர்களா?: காங்., கேள்வி

Updated : செப் 16, 2020 | Added : செப் 16, 2020 | கருத்துகள் (31)
Share
Advertisement
CoronaCases, Congress, RandeepSinghSurjewala, கொரோனா, பாதிப்பு, அதிகரிப்பு, காங்கிரஸ், கடவுள், பழி

புதுடில்லி: கொரோனா பாதிப்பு 50 லட்சத்தை கடந்துள்ள நிலையில், கொரோனா அதிகரிப்புக்கும் கடவுள் மீது பழிசுமத்த போகிறீர்களா என காங்., கேள்வியெழுப்பியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் 90 ஆயிரம் பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக பாதிப்பு எண்ணிக்கை இதுவரை 50 லட்சத்து 20 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பும் 82 ஆயிரத்தை கடந்துள்ளது. பாதிப்பை பொறுத்தவரையில் கடந்த 5ம் தேதி 40 லட்சமாக இருந்த பாதிப்பு எண்ணிக்கை, அடுத்த 11 நாட்களில் 50 லட்சத்தை கடந்துள்ளது குறித்து, மத்திய அரசுக்கு காங்., கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.


latest tamil news


காங்., தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கொரோனா வைரஸின் மகாபாரதம் தொடங்கிவிட்டது. ஆனால், மோடி அரசை காணவில்லை. கொரோனா வைரஸ் குறித்த சில உண்மைகள் தேவை. பிரதமர் மோடி பதில் அளிப்பாரா?
* ஒரு நாளுக்கான கொரோனா தொற்றில் உலக அளவில் இந்தியா முதலிடம் (90,123).
* ஒரு நாளுக்கான கொரோனா உயிரிழப்பிலும் உலக அளவில் இந்தியா முதலிடம் (1,290).
* கொரோனா வைரஸ் தொற்று இரட்டிப்பாக இருக்கிறது. உலக அளவில் இதிலும் முதலிடம் (31 நாட்களில் இரு மடங்கு).
* ஒட்டுமொத்த கொரோனா தொற்றில், உலக அளவில் இந்தியா 2-வது இடம்.
* கொரோனாவுக்குச் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா 2வது இடம் (9,95,933).
* மொத்த கொரோனா உயிரிழப்புகளில் உலக அளவில் 3வது இடம் (82,066).
* கொரோனா வைரஸ் பரவல் எப்போது கட்டுப்படுத்தப்படும் என்பதை நாட்டு மக்களுக்கு மத்திய அரசு கூற வேண்டும். அல்லது கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்புக்கும் கடவுள் மீது பழிபோட்டுவிட்டு, பொறுப்பைத் தட்டிக்கழித்துவிடுமா?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
16-செப்-202023:12:58 IST Report Abuse
S.Ganesan சரிங்க. கடவுள் பேரில் பழி போடாமல் , காங்கிரெஸ்தான் அதற்கு காரணம் என்றால் ஒப்பு கொள்வாரா ?
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
16-செப்-202022:35:24 IST Report Abuse
Rajagopal கடவுள் மேல பழி வேண்டாம். ஒங்க மேல பழி போட்டுரலாம். பரவாயில்லையா?
Rate this:
Cancel
kanisha - CHENNai,இந்தியா
16-செப்-202021:43:20 IST Report Abuse
kanisha வெட்கம் கேட்ட, கேவலமான ஜந்துக்கள் வசிக்கும் இடம் இந்த காங்கிரஸ் கூடாரம் என்பது மேலும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X