பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா

Updated : செப் 16, 2020 | Added : செப் 16, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கோவை: பா.ஜ.,வின் முன்னாள் மாநில தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.


latest tamil news



இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது. கொரோனா தொற்றால் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பா.ஜ., மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



இதுகுறித்து அவர் தனது முகநூல் பதிவில், 'நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அதன் முடிவு இன்று காலை வெளியானது. அதில் எனக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளேன். உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் ஆசீர்வாதங்கள் மற்றும் வாழ்த்துக்களால் மிக விரைவில் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்புவேன். நான் விரைவில் குணமடைய வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Priyan Vadanad - Madurai,இந்தியா
16-செப்-202019:13:57 IST Report Abuse
Priyan Vadanad நல்லவர், இவர் மீளவேண்டும். கடவுள் கருணை பெருகட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X