இந்தியா- சீனா எல்லையில் 20 நாட்களில் 3 முறை துப்பாக்கிச்சூடு!

Updated : செப் 16, 2020 | Added : செப் 16, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
இந்தியா, சீனா, லடாக், கல்வான், துப்பாக்கிச்சூடு, ராணுவம்,

லடாக்: கடந்த 45 ஆண்டுகளாக இந்தியா - சீனா எல்லையில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெறாத நிலையில், லடாக்கின் கிழக்கு பகுதியில் கடந்த 20 நாட்களில் 3 முறை துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக ராணுவ வட்டாரங்கள் கூறுகையில், முதல் சம்பவம், கடந்த ஆக.,29 - 31 தேதி இரவு, பாங்காங் ஏரியின் தெற்கு பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது, இந்திய ராணுவம் முன்னெச்சரிக்கையாக துப்பாக்கிச்சூடு நடத்தியது.

இரண்டாவது சம்பவம் கடந்த 7 ம் தேதி முக்பரி என்ற இடத்தில் நடந்தது.

மூன்றாவது சம்பவம் கடந்த 8 ம் தேதி பாங்காங் ஏரியின் வடக்கு கரை பகுதியில் நடந்தது. இரு தரப்பும் 100 சுற்றுக்கு மேல் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது, சீன ராணுவத்தினர் ஆத்திரமூட்டும் வகையில் செயல்பட்டனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

லடாக்கின் கல்வான் ஏரி பகுதியில் சீனாவின் அத்துமீறல் காரணமாக இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பல சுற்று பேச்சுவார்த்தை நடந்த நிலையில், அதில் ஒருமித்த முடிவுகள் எதுவும் ஏற்படவில்லை.


latest tamil news



மாஸ்கோவில் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் சந்தித்து பேசினர். அப்போது, இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் இடையிலான பேச்சுவார்த்தை நடத்த ஒப்பு கொள்ளப்பட்டது. ஆனால், அதற்கான தேதியை சீனா உறுதி செய்யாமல் இழுத்தடித்து வருகிறது. லடாக்கில் சீன ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அங்கு இந்திய ராணுவமும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian Ravichandran - Chennai,இந்தியா
16-செப்-202020:24:18 IST Report Abuse
Indian  Ravichandran நாம போரில் இறங்க வேண்டாம், வந்தால் ஒருத்தனையும் உயிரோட விட வேண்டாம் நியூகுக்ளியர் பாம் நம்மகிட்டயம் இருக்கும் விஷயத்தை சப்பைமூக்குக்கு கொஞ்சம் சொல்லிவையுங்க
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
16-செப்-202018:42:26 IST Report Abuse
S. Narayanan myle myle endraal eragu podaathu. chinaavukku thanguntha soodu koduththaal thaan saripadum.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X