பொது செய்தி

இந்தியா

நவராத்திரி; பிரம்மாண்டமாக தயாராகிறது அயோத்தி!

Updated : செப் 16, 2020 | Added : செப் 16, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

அயோத்தி: அயோத்தியில் அடுத்த மாதம் நவராத்திரி விழாவை, வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளன.



latest tamil news



தென் மாநிலங்களில் நவராத்திரி விழா என்ற பெயரில் கொண்டாடப்படும் பண்டிகை, வட மாநிலங்களில் ராம் லீலா என்ற பெயரில் நடைபெறும். 10வது நாளான விஜயதசமி, தசரா பண்டிகையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு அயோத்தியில் ராம் லீலா அக்., 17 - 25 வரை சரயு ஆற்றங்கரையில் லட்சுமன் கோட்டையில் நடைபெற உள்ளது. இதில் துளசிதாசர் எழுதிய ராமாயணம் நாடகமாக அரங்கேற்றப்படும். அதில், அரசியல் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் நடிக்க உள்ளனர்.


latest tamil news



கவிதா ஜோஷி என்பவர் சீதையாகவும், சோனு சாகர் ராமனாகவும் நடிக்க உள்ளனர். போஜ்புரி நடிகரும், கோரக்பூர் பா.ஜ., - எம்.பி.,யுமான ரவி கிஷன் ராமனின் தம்பியான பரதன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வட கிழக்கு டில்லியின் பா.ஜ., - எம்.பி., மனோஜ் திவாரி கிஷ்கிந்தை மன்னரின் மகன் அங்கத் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


latest tamil news



'கடந்த ஆண்டு ராம் லீலா நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். இந்தாண்டு அக்டோபருக்குள் கொரோனா தொற்று குறைந்தால் பொதுமக்கள் முன்னிலையில் நாடகம் அரங்கேற்றப்படும். இல்லையெனில் பேஸ்புக், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களிலும், டிடி மற்றும் பிற சேனல்களிலும் நேரடியாக ஒளிபரப்படும்' என உ.பி., அரசு தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
16-செப்-202020:51:57 IST Report Abuse
Ramesh Sargam navaraathiri vizha siarappaaga thodangi nadaiperattum.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
16-செப்-202018:41:34 IST Report Abuse
skv srinivasankrishnaveni இந்தாண்டு எப்போது நவராத்திரி ஆரம்பம் சிலர் அடுத்த அம்மாவாசைக்குப் பிறக்குன்னும் சில நாளை மறுத்தினம் என்று சொல்றாங்களே ஒன்னும் புரியவேயில்லே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X