பீகார் சட்டசபை தேர்தல் :குவியும் நலத் திட்டங்கள்

Added : செப் 16, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: பீகாரில் இந்தாண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி மத்திய, மாநில அரசு அறிவித்து வரும் பல்வேறு திட்டங்களால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். பீகார் மாநிலத்தில் தற்போது முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் -பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. வரும் அக்., -நவ,, மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என

புதுடில்லி: பீகாரில் இந்தாண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி மத்திய, மாநில அரசு அறிவித்து வரும் பல்வேறு திட்டங்களால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.



latest tamil news



பீகார் மாநிலத்தில் தற்போது முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் -பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. வரும் அக்., -நவ,, மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து மாநில மற்றும் மத்திய அரசுகள் சார்பில் பல்வேறு மக்கள் நல திட்டப்பணிகள் அதிகளவில் செயல்படுத்தப்படுகின்றன., இதன்காரணமாக அம்மாநில மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.


latest tamil news




கடந்த திங்கட்கிழமை(14ம் தேதி) 900 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங்முறையில் துவக்கிவைத்தார். தொடர்ந்து பேசிய பிரதமர் பீஹார் உட்பட, நாடு முழுதும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை, மத்திய பா.ஜ., கூட்டணி அரசு மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் சரியான அரசு இருந்தால், மத்திய அரசின் திட்டங்கள், மக்களை நேரடியாக சென்றடையும் என்பதை, கடந்த, 15 ஆண்டுகளாக, பீஹார் நாட்டுக்கு உணர்த்தி வருகிறது. என கூறினார்.

நேற்று (15ம் தேதி) பீகார் மாநிலத்தில் இரண்டு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உட்பட 541 கோடி ரூபாய் செலவில் ஏழு புதிய நகர்புற வளர்ச்சி திட்டங்களுக்கான துவக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் வீடியோ கான்பரன்ஸஅ மூலம் பங்கேற்றார். மாநிலத்தின் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி பணிகளை அதிகரிக்க மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு செயல்படுகிறது. மாநிலத்தில் 20 நகரங்கள் கங்கை நதி கரை ஓரத்தில் அமைந்துள்ளது. நதியை தூய்மையாக பராமரிக்க ரூ.6,000 கோடி செலவில் 50 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என கூறினார்.


ரயில் திட்டங்கள்



இந்நிலையில் பீகார் மாநிலத்தின் ரயில் பயணிகளின் நலனுக்காக 12 ரயில் திட்டங்களை வரும் வியாழக்கிழமை ( செப். 18 ம் தேதி )வீடியோ கான்பன்ரன்ஸ் மூலம் துவக்கி வைக்க உள்ளதாக பிரதமர் அலுவலக செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

அடுத்து வரும் நாட்களில் பீகார் மாநிலத்தில் சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மேம்பாட்டு பணிகளை பிரதமர் துவக்கி வைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
17-செப்-202000:39:57 IST Report Abuse
மதுரை விருமாண்டி கூடவே நாலைந்து புதிய மின்மயானங்களை உடனடியாக திறந்து வைக்கிறார் மாண்புமிகு பிரதமர்.. நாடெங்கும் அதன் தேவை வேகமாக பெருகுகிறது.. கடந்த 9 நாட்களில் 10 லட்சம் புதிய தொற்றுக்களை பரப்பிய அரசாங்கம் என்ற பெரிய பெருமை மோடி ஆட்சிக்கு வந்துள்ளது..
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
17-செப்-202000:37:18 IST Report Abuse
மதுரை விருமாண்டி இந்தியாவில் 50 லட்சத்தை கடந்த தொற்றின் வீச்சு.. கடைசி 10 லட்சம் தொற்றுக்கள் வெறும் 9 நாட்களில் கூடியுள்ளது என்பது உலக சாதனை.. அடுத்த 10 லட்சம் 7 நாட்களில் கூடும் கொடுமை.. இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை கடுமையாக இருக்கும் என்று மற்ற உலகநாடுகள் கவலையில் இருக்கின்றன.. இங்கே பீகார் தேர்தலில் கவனம் செலுத்தப்படுகிறது..அக்டோபர் 2 க்குள் அமெரிக்காவை தாண்டி 70 லட்சம் தொற்றுகள், 1,50,000 சாவுகள் என்று கொசுக்களை போல செத்து மடியப்போகிறார்கள்.. கொள்ளிக்கட்டையை ஏற்றி மேலே படுக்க சொல்லுவானுங்க இந்த மூடர்கூட தலைவர்கள்..
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
17-செப்-202000:31:20 IST Report Abuse
மதுரை விருமாண்டி கடந்த 10 வருசமா ஒன்னும் செய்யலைன்னு தெரியுது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X