புதுடில்லி: புதிய பார்லி கட்டடம் கட்டும் பணி ஒப்பந்தத்தை டாடா நிறுவனம் பெற்றுள்ளது.
டில்லியில் சவுத் பிளாக்கிற்கு அருகே சென்ட்ரல் விஸ்டா என்று அழைக்கப்படும் பகுதியில் புதிய பார்லிமென்ட் கட்டடம், அரசு துறைகளுக்கான 8 கட்டடங்கள், அலுவலகர்களுக்கான குடியிருப்புகளை கட்டி முடிக்க பா.ஜ., அரசால் திட்டமிடப்பட்டது.
தரை தளம் மற்றும் இரண்டு மாடிகளுடன் முக்கோண வடிவில் பார்லிமென்ட் கட்டடம் கட்ட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. கட்டடத்தின் மேற்குப் பகுதியில் அசோகச் சின்னம் நிறுவப்பட உள்ளது. இப்பணி ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் விண்ணப்பித்தன. நிதி முறையிலான டெண்டருக்கு டாட்டா, எல் அண்ட் டி மற்றும் சபூர்ஜி பலோன்ஜி நிறுவனங்கள் தகுதி பெற்றன.அவற்றின் விண்ணப்பங்களை இன்று (செப்.,16) மத்திய அரசின் பொதுப்பணித்துறை பிரித்துப் பார்த்தது.

அதில் 861 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் கேட்டிருந்த டாட்டா நிறுவனத்திற்கு கட்டடப்பணிக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது. எல் அண்ட் டி நிறுவனம் 865 கோடி ரூபாய்க்கு பணி ஒப்பந்தம் கேட்டிருந்தது. நடப்பு பார்லி மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்ததும் கட்டடத்திற்கான கட்டுமானப் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் ஒரே நேரத்தில் 900 முதல் 1,200 எம்.பி.க்கள் வரை அமரும் வகையில் அமர முடியும். வரும் 2022ல் கட்டப்பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE