டில்லி கலவர வழக்கில் 17,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

Updated : செப் 16, 2020 | Added : செப் 16, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
Delhi Riots: 17,500-page chargesheet filed, 15 accused, Umar Khalid, Sharjeel Imam not listed

புதுடில்லி: டில்லி கலவர வழக்கில் இன்று 17,500 பக்க குற்றபத்திரிகையை டில்லி போலீசார் கோர்ட்டில் சமர்பித்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்த சி.சி.ஏ. எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டில்லியில் கடந்த பிப்ரவரி மாதம் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. டில்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஜாப்ராபாத், மாவுஜ்பூர், சீலாம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கலவரம் பரவியது. இந்த கலவரத்தில் 54 பேர் பலியாகினர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ரூ. 20 கோடி மதிப்பிலான பொது சொத்துக்கள் சேதமடைந்தன.


latest tamil news
கலவர வழக்கை டில்லி சிறப்பு போலீஸ் படையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இன்று 17,500 பக்க குற்றப்பத்திரிகையை கிழக்கு டில்லி கர்கார்டோமா கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்பட 15 பேர், இரண்டு 25 வாட்ஸ்ஆப் குருப்பினர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-செப்-202023:34:20 IST Report Abuse
நக்கல் ஒருத்தன் தப்பிக்க கூடாது...
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
16-செப்-202022:34:38 IST Report Abuse
Rajagopal இந்திரா காந்தி இறந்த போது காங்கிரஸ் குண்டர்களால் கொள்ளப்பட்ட சீக்கியர்களுக்கு இன்னும் நேர்மையான நீதி வழங்கப்படவில்லை. இது இன்னும் ஒரு ஐம்பது ஆண்டுகளில் தீர்ப்புக்கு வரும். அப்போது ஒரு ஆயிரம் ருபாய் அபராதம் செலுத்த வேண்டி வரும்.
Rate this:
Cancel
16-செப்-202021:37:45 IST Report Abuse
ஆப்பு 17500 பக்கமா? எத்தனை காப்பி எடுத்தாங்க? எத்தனை மரங்களை வெட்டுனாங்கோ? டிஜிட்டல் இந்தியா என்ன ஆச்சு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X