சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலையில் வழியில்லாமல் தவித்த யானை போக்குவரத்து பாதிப்பு

Added : செப் 16, 2020
Share
Advertisement
 சாலையில் வழியில்லாமல் தவித்த யானை போக்குவரத்து பாதிப்பு

குன்னுார் : குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசியநெடுஞ்சாலைக்கு வந்த யானைக்கு வனப் பகுதிக்குள் செல்ல வழிஇல்லாமல் தவித்தது. இதனால்ஒரு மணி நேரம் போக்குவரத்து
பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் -மேட்டுப்பாளையம் தேசியநெடுஞ்சாலை சாலையோரம் வனப் பகுதிகளில் 10க்கும் மேற்பட்டகாட்டு யானைகள் உள்ளன.இந்நிலையில், நேற்று மாலை 4:00
மணி அளவில் மரப்பாலம் அருகேஒற்றை யானை சாலைக்கு வந்தது. இதுகுறித்து குன்னூர் வன சரகர் சசிகுமாருக்கு தகவல் வந்தது. இதன் அடிப்படையில் கார்டு ராம்குமார், வேட்டை தடுப்பு காவலர் லோகேஸ்வரன் உட்பட 3 பேர் வாகனங்களை தடுத்துநிறுத்தி, யானையை வனப்பகுதிக்குள்விரட்ட முயற்சித்தனர்.

எனினும், அந்தப் பகுதியில்சாலையோரத்தில், இறங்க வழியில்லாததால் நீண்டநேரம் சாலையிலேயே யானை நடந்து சென்றது. ஆங்கங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அவ்வழியாக வந்த இருசக்கரவாகனத்தில் வந்த தம்பதியினர் மற்றும் சிலர் பைக்குகளை விட்டுவிட்டு ஓட்டம் பிடித்து, லாரியில் மறைந்து நின்றனர்.
வாகனங்களில் வந்த யாரையும் எந்த தொந்தரவும் செய்யாமல், மாலை 5:00 மணியளவில் வனப்பகுதிக்குள்யானை சென்றது. ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலை துறை சாலை விரிவாக்கம் செய்து வருவதாலும், பர்லியாரில் இருந்து டால்பின் நோஸ் பகுதிக்கு புதிய சாலை அமைத்து வருவதால் அங்கு ஆட்களை வைத்து விரட்டுவதாலும் யானைகள் சாலைக்கு வந்து சிரமப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X