பொது செய்தி

இந்தியா

எல்லையில் தொடரும் பதற்றம்: போபர்ஸ் பீரங்கிகளை தயார்படுத்தும் நம் ராணுவத்தினர்

Updated : செப் 16, 2020 | Added : செப் 16, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
eastern ladak, bofors guns, get ready, கிழக்கு லடாக், போபர்ஸ் பீரங்கிகள், தயார்நிலை, பொறியாளர்கள்

புதுடில்லி: கிழக்கு லடாக்கின் எல்லைப் பகுதியில் நம் ராணுவத்தினர் போபர்ஸ் பீரங்கிகளை தயார்படுத்த துவங்கி உள்ளனர்.

கிழக்கு லடாக்கின் இந்திய-சீன எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தின் அத்துமீறலால் பதற்றம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் போபர்ஸ் பீரங்கிகளை தயார்படுத்தும் பணியில் நம் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் இந்திய ராணுவம் ஆயுதங்களுடன் வீரர்களை முழு உஷார் நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

கடந்த 2017 முதல் டோக்லலாம் எல்லையில் அத்துமீறிய சீன ராணுவம், இந்தாண்டு மார்ச் இறுதி வாரம் முதல் லடாக் எல்லை பகுதியில் தொடர்ச்சியாக அத்துமீறலில் ஈடுபட்டுவருகிறது. லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, பங்காங் திசோ எரிக்கரை, சசூல் போன்ற பகுதிகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது. லடாக் மட்டுமின்றி அருணாச்சல் மற்றும் டோக்லாம் எல்லைப் பகுதிகளையும் சீனா குறி வைத்துள்ளது. இதனால் அங்கும் இந்திய ராணுவம் குவிக்கப்பட்டு சீனாவின் நடவடிக்கை கண்காணிக்கப்பட்டு வருகிறது


latest tamil news


இந்நிலையில் கிழக்கு லடாக்கில் போபர்ஸ் நிறுவன இலகு ரக பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதம் தாங்கிய படைகளை இந்திய ராணுவம் குவித்துள்ளது. 1980 ஆண்டுகளில் இந்திய ராணுவத்தில் போபர்ஸ் பீரங்கிகள் இடம் பெற ஆரம்பித்தன. பொறியாளர்கள் போபர்ஸ் பீரங்கிகளை தயார்படுத்த தொடங்கி விட்டனர்.

போபர்ஸ் பீரங்கிகளால் தாழ்வான மற்றும் அதி உயர இலக்குகளை துல்லியமாக குறி வைத்து தாக்க இயலும். மேலும், இந்த வகை பீரங்கிகளை இடம் விட்டு இடம் எளிதாக நகர்த்த முடியும். இந்த வகை பீரங்கிகள் ஆப்ரேஷன் விஜய் என்ற போர் நடவடிக்கையின் போது வெற்றிகரமாக ஈடுபடுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-செப்-202008:20:58 IST Report Abuse
ஆப்பு நல்லா செக் பண்ணுங்க. சுட்டா குண்டுகளுக்கு பதில் கரன்சி மழை பொழியலாம்.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
17-செப்-202007:20:20 IST Report Abuse
Mani . V அந்த 38,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு என்னா ஆச்சு?
Rate this:
Cancel
16-செப்-202022:06:41 IST Report Abuse
ஆப்பு காங்குரஸ்காரன் வாங்கியதாச்சே.... நல்லா சுடாது.நேரு மேலே பழியைப் போட்டுட்டு புதுசா ஏதாவது வாங்குங்க.
Rate this:
Vetri Vel - chennai,இந்தியா
17-செப்-202003:15:31 IST Report Abuse
Vetri Velஏன்டா ரபேல் ஊழல் காசு தீர்ந்து போச்சா..?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X