பொது செய்தி

இந்தியா

தென் மாநிலங்களில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடமாட்டம்: மத்திய அரசு

Updated : செப் 16, 2020 | Added : செப் 16, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
ISIS, most active, southern states, Islamic State, NIA, Rajya Sabha

புதுடில்லி: நாட்டில் தென் மாநிலங்களில் ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நடந்துவரும் பார்லி., குளிர்கால கூட்டத்தொடரில், ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி அளித்த பதில்: தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ளது பாதுகாப்பு அமைப்புகளின் கவனத்திற்கு வந்துள்ளது.

ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, தங்கள் இயக்கத்தை பரப்ப முயற்சித்து வருகிறது. இதற்காக சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துகிறது. சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் பலவற்றை இந்தியா தடை செய்துள்ளது.


latest tamil newsதென்னிந்திய மாநிலங்களான தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள் இருப்பது தொடர்பான, 17 வழக்குகளை பதிவு செய்துள்ள தேசிய புலனாய்வு அமைப்பு, 122 பேரை கைது செய்துள்ளது.

தென்மாநிலங்கள் தவிர்த்து மஹாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீரிலும் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
18-செப்-202010:52:27 IST Report Abuse
konanki லவ் ஜிகாத் கேரளத்தில் தீவிரமாகி விட்டது. சிவகுமார் கார்த்தி குடும்பமும் பாதிப்பு. கேரளா வில் உள்ள இரண்டு கிருத்துவ சர்ச் பிரிவின் தலைமை பாதிரியார்கள் லவ் ஜிகாத் பாதிப்பு குறித்து பிரஸ் மீட் வைத்து முதல்வருக்கு தெரிய படுத்தி லவ் ஜிகாத் எனும் கொடுமையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக கம்யூனிஸ்ட் விசிக காங்கிரஸ் கட்சிகள் முஸ்லிம் வோட்டுககாக ISIs எனும் கொடிய விஷ பாம்புகளை ஆதரிக்கிறது என்ற நிலை தமிழக 7.5 கோடி மக்களுக்கு கெடுதல் வர வைக்கும்
Rate this:
Cancel
Thirumal Kumaresan - singapore,இந்தியா
17-செப்-202007:46:15 IST Report Abuse
Thirumal Kumaresan உளவு அமைப்புகளும் போலீசும் என்ன செய்கிறார்கள்.அரசு தேவை இல்லாத பயங்கரவாதிகளை திருத்த பார்க்க வேணும் சரிபட்டு வராவிடடால் களை எடுத்துவிட வேண்டும், சாதாரண மக்கள் பாதிக்காமல் பார்த்து கொள்வது அரசின் கடமை
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
17-செப்-202000:15:54 IST Report Abuse
konanki திமுக கம்யூனிஸ்ட் விசிக கட்சிகள் இந்த கூட்டத்திற்கு ஆதரவு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X