மத்திய பிரதேசத்தில் மின்னல் தாக்கி 7 பேர் பலி

Updated : செப் 16, 2020 | Added : செப் 16, 2020
Share
Advertisement

போபால் / தாமோ : மத்திய பிரதேசத்தில் தாமோ மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.



latest tamil news



இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மாநிலங்களில் பெய்யும் கனமழை மற்றும் மின்னல் தாக்குதல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் எண்ணற்றோர் பாதிக்கப்படுவதும், உயிரிழப்பதும் ஆங்காங்கே தொடர்ந்து கொண்டிருக்கிறது. மத்திய பிரதேசம் மாநிலத்தின் தலைநகர் போபாலில் இருந்து கிழக்கே 264 கி.மீ தொலைவில் அமைந்த தாமோ மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட மொத்தமாக 7 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். மின்னல் தாக்கி உயிரிழந்தவர்கள் குறித்து மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் முன்னாள் முதல்வர் கமல்நாத் ஆகியோரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.


latest tamil news



பாதிப்பு குறித்து மாவட்ட நிர்வாகம் அளித்த தகவல்படி, மத்திய பிரதேசத்தின் தாமோ மாவட்டத்தில், தேஜ்கர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட சோதி லம்தி கிராமத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இவர்கள் 3 பேரும் பண்ணையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது மின்னல் தாக்கியது. அத்தடன் தபா கிராமத்தில் 2 பேர், சதாரியா மற்றும் குன்வார்பூரில் தலா ஒருவர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என கூறப்படுகிறது.

இது குறித்து முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் முன்னாள் முதல்வர் கமல்நாத் ஆகியோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X