பொது செய்தி

இந்தியா

மாஸ்க் அணியுங்கள்: உயிர்களை காத்திடுங்கள்:கூகுள் டூடுல் வலியுறுத்தல்

Updated : செப் 16, 2020 | Added : செப் 16, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

புதுடில்லி: மாஸ்க் அணியுங்கள். உயிர்களை காத்திடுங்கள் என கூகுள் டூடுல் மூலம் வலியுறுத்தியுள்ளது.



latest tamil news



கூகுள் நிறுவனம் தனது சர்ச் இன்ஜினில் அவ்வப்போது முக்கிய நிகழ்வுகளை தனது டூடுலில் பதிவு செய்வது வழக்கம். அதன்படி தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசில் இருந்து காக்கும் வகையில் முக கவசம் அணிய டூடுலில் வலியுறுத்தியுள்ளது.

அதில் தெரிவித்து இருப்பதாவது: உண்மைகளை அறிந்து, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் உங்களையும் உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களையும் பாதுகாக்க முடியும். உள்ளூர் சுகாதார மையம் வழங்கும் ஆலோசனையை பின்பற்றுங்கள்.


latest tamil news



கோவிட்-19 பரவுவதைத் தடுக்க உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். சோப்புகளை பயன்படுத்தவும்.உடல் ரீதியான தூரம் சாத்தியமில்லாத போது முகமூடியை அணியுங்கள். உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் வீட்டிலேயே இருங்கள்.

காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், மருத்துவ சிகிச்சை பெறவும்.மற்றவர்களுக்கு வைரஸ் பரவாமல் தடுக்க முககவசம் உதவும். முககவசம் மட்டும் கோவிட் 19க்கு எதிராக பாதுகாக்காது, மேலும் உடல் ரீதியான, சமூக இடைவெளி மற்றும் சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Madhu Kumaran - vellore,இந்தியா
17-செப்-202010:55:34 IST Report Abuse
Madhu Kumaran எஸ் good
Rate this:
Cancel
16-செப்-202021:33:00 IST Report Abuse
ஆப்பு ஆளாளுக்கு அட்வைஸ். இங்கே அபராதம் போட்டாலே ஒண்ணும் நடக்கலே...
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
16-செப்-202020:56:12 IST Report Abuse
Ramesh Sargam வாக்சின் வர பல மாதங்கள் ஆகலாம். வராமல் போனாலும் போகலாம். ஆனால், நாம் மாஸ்க் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதால் மூலம் நாம் அனைவரும் நம்மை காப்பாற்றிக்கொள்ளலாம். ஆகவே "மாஸ்க் அணியுங்கள். நோய் தொற்றை எதிர்த்து போராடுவீர்"
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X