ராஜஸ்தான் படகு விபத்து: 14 பேர் உயிரிழந்ததாக தகவல்

Updated : செப் 16, 2020 | Added : செப் 16, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் கோடா மாவட்டத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அம்மாநிலத்தின் இந்தர்கர் பகுதியிலுள்ள கமலேஷ்வர் மாதவ் என்ற சிவன் கோவிலுக்கு பெண்கள் குழந்தைகள் உட்பட 45க்கும் மேற்பட்ட பக்தர்கள் புதன்கிழமை காலை சம்பல் நதியில் படகில் சென்ற போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 25 பேர் நீந்தி கரை
rajastahan ,boat accident, 14 killed, ராஜஸ்தான், படகு விபத்து, 14 பேர் பலி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் கோடா மாவட்டத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்மாநிலத்தின் இந்தர்கர் பகுதியிலுள்ள கமலேஷ்வர் மாதவ் என்ற சிவன் கோவிலுக்கு பெண்கள் குழந்தைகள் உட்பட 45க்கும் மேற்பட்ட பக்தர்கள் புதன்கிழமை காலை சம்பல் நதியில் படகில் சென்ற போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 25 பேர் நீந்தி கரை சேர்ந்து விட்டதாக மாவட்ட எஸ்.பி., சரத் சவுத்ரி தெரிவித்தார்.

நீரில் மூழ்கி பலியானவர்களில் 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுவிட்டதாக கோடா மாவட்ட கலெக்டர் உஜ்ஜாவால் சிங் ரத்தோரே தெரிவித்தார் , தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. பக்தர்களை ஏற்றிச் சென்ற படகின் தகுதிச் சான்று இன்னும் புதுப்பிக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.


latest tamil news


இந்நிலையில் பிரதமர் மோடி ராஜஸ்தான் படகு விபத்து குறித்து ஆழந்த வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ 1 லட்சம் வழங்கப்படும் என ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-செப்-202000:12:49 IST Report Abuse
தமிழவேல் இத்தனைப் பேருக்கு மேல் ஏறக்கூடாது என்று படகில் போர்ட் வைக்கப் பட வேண்டும். இதனால், அதிக பயணிகள் ஏறுவதற்குத் தயங்கலாம் .
Rate this:
Cancel
Rajan - Chennai,இந்தியா
16-செப்-202021:31:40 IST Report Abuse
Rajan ராவுளு கொரோனவை கட்டு படுதலைனு சொல்றான், ஆனால் கூடி கும்மி அடிக்க வுடராங்கோ அங்கோ,
Rate this:
Cancel
சத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா
16-செப்-202021:02:37 IST Report Abuse
சத்யமேவ ஜெயதே என்ன கூச்சல் அங்க.... ராஜஸ்தானை ஆளுவது காங்கிரஸ். மூச். சரிங்கய்யா.... அப்படியே.... அமைதியாக இருக்குறோமுங்க... மத்திய பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஏழு பேர் மரணமுங்க... இப்போதைக்கு அது போதும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X