பொது செய்தி

இந்தியா

ரயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை: பியூஷ் கோயல்

Updated : செப் 16, 2020 | Added : செப் 16, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
Piyush Goyal, Railways, privatisation, lok sabha, PPP

புதுடில்லி: ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் லோக்சபாவில் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதுகுறித்து லோக்சபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பியூஷ் கோயல் அளித்த பதில்: ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை. 2030ம் ஆண்டு வரை, ரயில்வே கட்டமைப்பை வலுப்படுத்துவது, மேம்படுத்துவது, நவீனப்படுத்துவது உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.50 லட்சம் கோடி நிதி தேவைபடுகிறது.


latest tamil news


இந்த நிதி பற்றாக்குறையை ஈடுகட்டவும், பயணிகளுக்கு தரமான ரயில், சரக்கு போக்குவரத்து சேவைகளை வழங்க, சில குறிப்பிட்ட திட்டங்களுக்கு மட்டும் பப்ளிக் மற்றும் பிரைவேட் பாட்னர்ஷிப்(PPP) திட்டத்தை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் நவீன அம்சங்கள் உள்ள ரயில்களை இயக்குவது இதில் அடங்கும். இவ்வாறு அவர் பதிலளித்தார்.


கனிமொழி கேள்வி:


தூத்துக்குடி - தாதன்குளம் ரயில் நிலையம் மூடப்படுமா? என தி.மு.க., எம்.பி., கனிமொழி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பியூஷ் கோயல், மத்திய அரசிடம் அப்படி எந்தவொரு திட்டமும் இல்லை என விளக்கமளித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
17-செப்-202009:25:11 IST Report Abuse
J.Isaac ரயில்வே அல்ல, ரயில்கள் அனைத்தும் தனியார்மயம் ஆகும்.
Rate this:
Cancel
P Sundaramurthy - Chennai,இந்தியா
17-செப்-202007:59:52 IST Report Abuse
P Sundaramurthy தனியார் மயம் ஆக்கப்போறீங்கன்னு எங்க சொன்னோம் . ஆக்கரத்தை நிறுத்துங்கோன்னுதான் சொன்னோம் . " சொல்வதெல்லாம் உண்மையைத்தவிர எல்லாம் ..."
Rate this:
Cancel
Elango - Kovai,இந்தியா
17-செப்-202007:12:14 IST Report Abuse
Elango ரயில்வே தனியார் மயம் ஆகாது, ரயில்கள் மட்டுமே தனியார் மயம் ஆகும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X