பொது செய்தி

இந்தியா

'இந்தியா - சீனா எல்லையில் அத்துமீறல் நடக்கவில்லை'

Updated : செப் 18, 2020 | Added : செப் 16, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
இந்தியா, சீனா, எல்லை, அத்துமீறல், நடக்கவில்லை

புதுடில்லி: 'இந்தியா - சீனா எல்லையில், கடந்த, ஆறு மாதங்களில் எந்த அத்துமீறலும் நடக்கவில்லை' என, ராஜ்யசபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக்கில், இரு நாட்டு எல்லையில், இந்தியா - சீனா படைகள் குவிக்கப்பட்டுள்ளன. கடந்த, சில மாதங்களாக, இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.


முயற்சி


இது குறித்து, நேற்று முன்தினம் பார்லி.,யில், ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங் அறிக்கை தாக்கல் செய்தார். 'லடாக்கில், 38 ஆயிரம் சதுர கி.மீ., பரப்பளவை, சீனா சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளது.'மே மாதத்தில், இந்திய எல்லைக்குள் நுழைய சீன ராணுவம் முயற்சி மேற்கொண்டது. எல்லையை பாதுகாப்பதில் நாம் கொண்டுள்ள உறுதியை யாரும் சந்தேகப்படத் தேவையில்லை' என, ராஜ்நாத் சிங் அப்போது கூறினார்.

இந்நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த, எம்.பி.,யான அனில் அகர்வால் எழுப்பியுள்ள கேள்விக்கு, மத்திய உள்துறை இணையமைச்சர், நித்யானந்த் ராய், ராஜ்யசபாவில், எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறல் தொடர்ந்து நடந்து வருகிறது. ஏப்ரல் மாதத்தில் மிகவும் அதிகமாக இருந்தது.


சர்ச்சை


அதே நேரத்தில், இந்தியா - சீனா எல்லையில், கடந்த, ஆறு மாதங்களில் எந்த அத்துமீறல்களும் நடைபெறவில்லை.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.தற்போது எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில், மத்திய அரசின் இந்த பதில் குழப்பத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்திஉள்ளது.
எல்லையை ஆக்கிரமிக்கும் சீனாவின் முயற்சியை குறைத்து மதிப்பிடும் வகையில் இந்த பதில் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


துப்பாக்கியால் சுட்டனரா?


எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ள நிலையில், இம்மாதம், 7ம் தேதி, சுஷூல் பகுதியில், இந்தியப் படைகள் துப்பாக்கியால் சுட்டதாக, சீன ராணுவம் கூறியது. ஆனால், அதை மறுத்துள்ள நம் ராணுவம், 'சீனப் படைகள் தான், துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே முன்னேற முயன்றது. அது தடுத்து நிறுத்தப்பட்டது' என, கூறியுள்ளது.

இந்நிலையில், பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், நம் வெளியுறவு அமைச்சர், ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர், வாங்க் யூ, ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில், 10ம் தேதிசந்தித்து பேசினர். அப்போது, ஐந்து அம்ச ஒப்பந்தம் செய்யப்பட்டது.இவர்களுக்கு இடையேயான பேச்சு நடந்து கொண்டிருந்த அந்த நேரத்தில், பாங்காங் ஏரியின் வடக்கு கரையோரப் பகுதியில், இரு ராணுவமும், தலா, 200 முறை, வானை நோக்கி சுட்டு எச்சரிக்கை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை, இது தொடர்பாக, இரு ராணுவமும் எதையும் கூறவில்லை.


அருணாச்சலில் பாதுகாப்பு


வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில், இந்தியா - சீனா எல்லையை ஒட்டி, சீனப் படைகள் தென்படத் துவங்கியுள்ளன. அதையடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.நம் எல்லையில் இருந்து, 20 கி.மீ., தொலைவில், சீன எல்லைக்குள், சீனப் படைகளின் நடமாட்டம் இருப்பது தெரியவந்துள்ளதாக, ராணுவம் கூறியுள்ளது.



போரை சந்திக்க தயார்!


'எல்லையில் போர் நடந்தால், அதை எதிர்கொள்வதற்கு, இந்தியப் படைகள் தயாராக இல்லை' என, சீன அரசின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதற்கு பதிலளிக்கும் வகையில், நம் ராணுவத்தின் வடக்கு மண்டலம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

இந்தியா அமைதியை விரும்பும் நாடு. அனைத்து அண்டை நாடுகளுடனும் நட்புடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். பிரச்னைகளுக்கு பேச்சின் மூலம் தீர்வு காண வேண்டும் என்பதே, நம்முடைய கொள்கை.அதே நேரத்தில், லடாக் எல்லையில் போர் ஏற்படும் சூழ்நிலையை சீனா ஏற்படுத்தினால், அதை எதிர்கொள்ள நம் படைகள் முழுமையாக தயாராக உள்ளன. இந்திய வீரர்கள், மனதளவிலும், உடலளவிலும் எந்தப் பிரச்னையையும் எதிர்கொள்ள முழு அளவில் தயாராக உள்ளனர்.

சீன ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் நகர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இதுபோன்ற கரடுமுரடான பாறைகள் உள்ள மலைப் பகுதியை சந்தித்திருக்க மாட்டார்கள். மேலும், எந்தளவுக்கு குளிர் சீதோஷ்ண நிலை இருந்தாலும், அதை சமாளித்து, எதிரிகளின் சவால்களை முறியடிக்கும் திறனை நம் வீரர்கள் பெற்றுள்ளனர்.ஆனால், அறியாமையால், நம் படைகள் குறித்து தவறான தகவல்களை சீன ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
17-செப்-202009:41:21 IST Report Abuse
Balasubramanian Ramanathan இந்த விஷயத்தில் களத்திலிருந்து கர்னல்‌ ஆப்பு நாதன் அனுப்பியுள்ள செய்தி முக்கியம் வாய்ந்தது.
Rate this:
Cancel
veeramani - karaikudi,இந்தியா
17-செப்-202008:44:20 IST Report Abuse
veeramani சீனாவுடன் ஆனா தொடர்பு , நடவடிக்கை இந்தியாவிற்கு நம்பிக்கை அளிப்பதாக இல்லை.. சீனாவின் செயலிகளை போல, சீனாவின் மொபைல்கள், பொம்மைகள்,பட்டாசுகள், துணிகள், ஆகியவற்றையும் தடைசெய்தால் தான் வேவு பார்ப்பதை தவிர்க்கமுடியும் . சீனாவுடனான தொடர்பில் உள்ள காட்சிகளையும் கண்காணிப்பில் வைத்து தேவைப்படின் தடை செய்யலாம். இந்தியர்கள் அனைவரும் மிக கவனமாக இருக்கவேண்டிய நேரமிது.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
17-செப்-202004:26:05 IST Report Abuse
blocked user காங்கிரஸ் சீனாவுடன் தான் செய்து கொண்ட ஒப்பந்தப்படி நாட்டை காட்டிக் கொடுக்க எல்லா வகையிலும் முயல்கிறது. காங்கிரசின் அங்கீகாரத்தை இரத்து செய்வதே சரியான நடவடிக்கையாக இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X