தென்னாப்பிரிக்க ஹோட்டலில் சாவகாசமாக வந்து சென்ற சிறுத்தை

Updated : செப் 16, 2020 | Added : செப் 16, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

ஜோஹென்ஸ்பெர்க்: தென்னாப்பரிக்காவில் வனப்பகுதியில் கட்டப்பட்டுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு பகல் நேரம் சிறுத்தை ஒன்று சாவகாசமாக வந்து செல்லும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி உள்ளது.



latest tamil news



தென்னாப்பிரிக்காவின் சிங்கிட்டா வனப்பகுதியில் குருகர் தேசிய பூங்காவில் கட்டப்பட்டுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சிறுத்தை ஒன்று அங்கு பணியாளர்கள் இருக்கும்போதே அவர்களை சிறிதும் கண்டு கொள்ளாமல் சாவகசாசமாக வந்து சென்றுள்ளது.

அந்த ஹோட்டலின் மேல் தளத்திற்கு சென்ற சிறுத்தை சுற்று முற்றும பார்த்தபின் அங்கிருந்து சென்று விட்டது. இந்த ஹோட்டல் கட்டப்பட்டுள்ள பகுதியில் வெர்வட் வகைக் குரங்குகள் அதிகம் காணப்படும். அவற்றை வேட்டையாடவே இந்த சிறுத்தை வந்திருக்கலாம் என வனத்துறையின் தெரிவித்தனர்.


latest tamil news



கொரோனா ஊரடங்கு காரணமாக இப்பகுதியில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததால் அவை சுதந்திரமாக செயல்படுவதாக இயற்கை ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார். முதலில், இந்த சிறுத்தை ராஜஸ்தான் மாநிலம் ராந்தம்போர் ஹோட்டலில் உளாவியதாக தவறுதலாக சமூக வலை தளங்கில் செய்தி பரவியது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
17-செப்-202009:37:41 IST Report Abuse
Balasubramanian Ramanathan சிறுத்தை கூட்டணிக்காக ஹோட்டலில் பேச்சு வார்த்தைக்கு போயிருக்கும். வர சொன்னவர்கள் யாரும் இல்லாததால் ஏமாற்றுதுடன் திரும்பி போயிடிச்சி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X