பொது செய்தி

இந்தியா

வந்தே பாரத் மிஷன் மூலமாக ரூ,2556.60 கோடி வருமானம் ; அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

Updated : செப் 16, 2020 | Added : செப் 16, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

புதுடில்லி : வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் மூலம் ஆக.,31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரூ. 2556.60 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்துதுறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறினார்.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்களை மீட்க, 'வந்தே பாரத் மிஷன்' திட்டம் தொடங்கப்பட்டு, ஏர் இந்தியா உள்ளிட்ட சிறப்பு விமானங்கள் மூலமாக அவர்கள் இந்தியா திரும்பினர். வந்தே பாரத் திட்டத்தின் மூலமாக ஆக.,31 வரை இயக்கப்பட்ட விமானங்களில் இருந்து ஏர் இந்தியா ரூ. 2556.60 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்துதுறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

இது தொடர்பாக ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இந்தியாவில் மார்ச் 23 முதல் திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்கள் நிறுத்தப் பட்டுள்ளன. எவ்வாறாயினும், பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் மக்கள் சிறப்பு சர்வதேச விமானங்கள் மூலம் தங்கள் இடங்களை அடைய உதவும் வகையில் மத்திய அரசு மே 6 முதல் இந்த பணியைத் தொடங்கியது. ஆக.,31 நிலவரப்படி ஏர் இந்தியா குழுமத்தால் மேற்கொள்ளப் பட்ட உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் சிறப்பு திருப்பி அனுப்பும் விமானங்களின் எண்ணிக்கை 4,505 ஆகும்.


latest tamil news



மேலும் சுமார் 11 லட்சம் இந்தியர்களில், சுமார் நான்கு லட்சம் பயணிகளை ஏர் இந்தியா குழுமம் இந்தியாவுக்கு கொண்டு சென்றது. ஏர் இந்தியா குழுமம் சுமார் 1.9 லட்சம் வெளிச் செல்லும் பயணிகளை (வெளிநாட்டினர் உட்பட) இந்தியாவிலிருந்து வெளிநாட்டு இடங்களுக்கு கொண்டு சென்றது. இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
17-செப்-202011:04:33 IST Report Abuse
Rangiem N Annamalai ஏர் இந்தியா என்று ஒரு கம்பெனி இருந்ததால் முடிந்தது .அதை விற்று விட்டால் யார் இதை செய்து இருப்பார்கள் ?.அதை விற்கும் முடிவை மாற்றி கொள்ளலாம் .அல்லது யோசிக்கலாம் .
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
17-செப்-202008:40:07 IST Report Abuse
Sampath Kumar பி.ம். கேர் என்று வசூல் பண்ணீங்க அதுல எம்புட்டு வந்தது சொல்லுங்க பார்க்கலாம் எல்லாம் டுபாக்கூர் பாக்கிக்கா
Rate this:
Cancel
Muguntharajan - Coimbatore,இந்தியா
17-செப்-202006:57:47 IST Report Abuse
Muguntharajan வருமானத்த மட்டும் சொன்னா போதுமா?செலவு எவ்வளவு? சொல்லுங்க. அப்ப தான தெரியும் உங்க வண்டவாளம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X