ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார்

Added : செப் 16, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார்

டோக்கியோ:ஷின்சோ அபே விலகியதைத் தொடர்ந்து, ஜப்பானின் புதிய பிரதமராக, யோஷிஹைட் சுகா, 71, நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் புதிய அமைச்சரவையும் பதவியேற்றது.

ஆசிய நாடான ஜப்பானின் பிரதமராக நீண்ட காலம் இருந்தவர், லிபரல் டெமாகிரடிக் கட்சியைச் சேர்ந்த, ஷின்சோ அபே, 65. உடல்நலக் குறைவுக்கு, தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டி உள்ளதால், பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக, அபே சமீபத்தில் அறிவித்தார். இதையடுத்து, ஆளும், லிபரல் டெமாகிரடிக் கட்சியில், புதிய பிரதமரை தேர்வு செய்யும் கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில், அபேயின் வலதுகரமாக கருதப்படும், தலைமை அமைச்சரவை செயலராயிருந்த, யோஷிஹைட் சுகா, 337 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

அதையடுத்து, நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்திற்குப் பின், பிரதமர் பதவியில் இருந்து, அபே விலகினார். புதிய பிரதமராக, யோஷிஹைட் சுகா, நேற்று மாலை நடந்த விழாவில் பதவியேற்றார். அவருடைய புதிய அமைச்சரவையும் பதவியேற்றது.முழு ஆதரவுபிரதமர் பதவியில் இருந்து விலகிய, ஷின்சோ அபே கூறியாவது:

பிரதமராக பதவியேற்ற முதல் நாளில் இருந்து, நாட்டின் நலனைக் காக்கும் வகையிலான வெளியுறவு கொள்கையையும், பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் என்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டேன். மக்களுடன் இணைந்து பல்வேறு சவால்களை எதிர்கொண்டதற்காக என்னைப் பற்றி, நானே பெருமை படுகிறேன்.பார்லிமென்ட் உறுப்பின ராக, சுகா அரசுக்கு என்னுடைய முழு ஆதரவையும் அளிப்பேன். என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இதுவரை ஆதரவு அளித்ததற்கும், என்னுடைய நிலைமையை புரிந்து கொண்டதற்கும், நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சுகா தலைமையிலான அரசுக்கு அனைத்து தரப்பினரும் முழு ஆதரவு அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

அமைச்சரவை கூட்டத்தில் பிரதமராக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, யோஷிஹைட் சுகா கூறியதாவது:பிரதமர் பதவியில் இருந்து விலகும் ஷின்சோ அபேயின் வழியில் செயல்படுவேன். அவர் துவக்கி வைத்து நிறைவடையாத திட்டங்களை செயல்படுத்துவேன். என்னுடைய முதல் முன்னுரிமை, கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை சீர்செய்வதுதான்.இவ்வாறு, அவர் கூறினார்.


மோடி வாழ்த்து



ஷின்சோ அபே உடன் மிக நெருங்கிய நட்பு கொண்டவர், பிரதமர் நரேந்திர மோடி. புதிய பிரதமராக பதவி யேற்றுள்ள சுகாவுக்கு, அவர் வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டிருந்தார். வாழ்த்து செய்தியில் அவர் கூறியுள்ளதாவது:ஜப்பான் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள யோஷிஹைட் சுகாவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். பாதுகாப்பு மற்றும் சர்வதேச பிரச்னைகளில் இருவரும் இணைந்து செயல்பட்டு, நம்முடைய நட்புறவை புதிய உச்சத்தை இட்டுச் செல்வோம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


விவசாயியின் மகன்



ஜப்பான் பிரதமராக பதவியேற்றுள்ள, யோஷிஹைட் சுகா, தன்னை எப்போதும் விவசாயியின் மகன் என்றே கூறிக்கொள்வார். ஷின்சோ அபேயின் வலது கரமாகவும், அவருடைய நிழலாகவும் செயல்பட்டவர். அரசு திட்டங்களை உன்னிப்பாக கவனித்து, அதிகாரிகளை விரட்டி, பணிகளை விரைவாக முடிப்பதில் வல்லவர். ஜப்பானில் சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கும், வேளாண் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டிற்கும், மக்களின் மொபைல்போன் செலவை கணிசமாக குறைக்கவும் துணை புரிந்தவர்.

அதிகம் வெளிநாடுகளுக்குச் செல்லாத, சுகா, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பான் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதுடன், கிழக்கு சீன கடலில், சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சியை சமாளிப்பது, அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியை வெற்றிகரமாக நடத்துவது ஆகிய சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது.கட்சியில் தன்னை எந்த கோஷ்டியையும் சாராதவர் என்று கூறிக்கொள்ளும் சுகா, கட்சியில் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்லக் கூடியவர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
17-செப்-202005:51:02 IST Report Abuse
 Muruga Vel சுகா ..சொல்லிக்கிட்டே இருந்தா காசு காசு ..
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17-செப்-202004:27:22 IST Report Abuse
J.V. Iyer துணைமுதல்வர் பொறுப்பேற்கவில்லையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X