அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் பிடனுக்கு ஆதரவு அதிகரிப்பு

Added : செப் 16, 2020
Share
Advertisement
 அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் பிடனுக்கு ஆதரவு அதிகரிப்பு

வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு, அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் ஆதரவு அதிகரித்துள்ளது, கருத்து கணிப்பில் தெரியவந்து உள்ளது.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல், நவம்பர், 3ம் தேதி நடக்கிறது. இதில், குடியரசு கட்சி சார்பில், அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஓட்டுரிமைஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார். அமெரிக்காவில், 20 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் ஓட்டுரிமை பெற்றுள்ளனர்.இந்நிலையில், அதிபர் தேர்தல் பற்றி, அமெரிக்க வாழ் இந்தியர்களிடம், இந்திய வம்சாவளியினர் மற்றும் ஆசிய அமெரிக்கர்கள் அமைப்பு, கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. அதில், இந்தியர்களிடம், ஜோ பிடனுக்கு ஆதரவு அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது.

அதாவது, 66 சதவீத இந்தியர்கள், ஜோ பிடனுக்கும், 28 சதவீத இந்தியர்கள், டிரம்புக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த, 2016 அதிபர் தேர்தலில், 77 சதவீத இந்தியர்கள், ஹிலாரி கிளின்டனுக்கும், 16 சதவீத இந்தியர்கள், டிரம்புக்கும் ஓட்டளித்தனர். இதற்கிடையே, அதிபர் தேர்தல் பிரசாரத்தில் கொரோனா பரவல் முக்கிய இடம் பிடித்துஉள்ளது.

சில மாதங்களுக்கு முன், டிரம்ப் அளித்த பேட்டி ஒன்றில், 'கொரோனா தொற்றின் தீவிரம் தெரிந்தும் அதை நான் காட்டிக்கொள்ளவில்லை' என கூறியிருந்தார். இந்நிலையில், பிலடெல்பியாவில் அதிபர் டிரம்ப் கூறியதாவது:கொரோனாவை குறைத்து மதிப்பிட்டதாக, நான் கூறவில்லை. ஆனால், கொரோனாவை தடுக்க, முக கவசம் அணிவதை, கட்டாயமாக்க வில்லை. ஏனெனில், முககவசம் அணிவதால், கொரோனாவை தடுக்க முடியாது என, பலரும் சந்தேகப்பட்டனர்.


வலியுறுத்தல்



எனினும், அரசின் தொற்று நோய் பரவல் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், முககவசம் அணிவதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு முயற்சி, வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இன்னும், மூன்று அல்லது நான்கு வாரங்களில், இது தொடர்பாக உங்களுக்குத் தெரிவிப்போம்.இவ்வாறு, டிரம்ப் கூறினார்.


ஜோ பிடனுக்கு அறிவியல் பத்திரிகை ஆதரவு



அமெரிக்காவில்,175 ஆண்டுகளாக வெளிவரும் அறிவியல் பத்திரிகையான, 'சயின்டிபிக் அமெரிக்கன்' அதிபர் தேர்தலில், யாரையும் ஆதரித்து எழுதியதில்லை. இந்நிலையில், முதல் முறையாக, இந்த பத்திரிகை, அதிபர் தேர்தலில், ஜனநாய கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. 'அதிபர் டிரம்பின் நான்கு ஆண்டு கால ஆட்சி, அறிவியல் சமூகத்துக்கு மிக மோசமானதாக இருந்தது. டிரம்ப் மீண்டும் அதிபரானால், நாட்டின் அறிவியல் வளர்ச்சி பாதிக்கப்படும். அதனால், ஜோ பிடனை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம்' என, அந்த பத்திரிகையின் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X