பாக்.,குக்கு தகுதியில்லை இந்தியா கடும் தாக்கு

Added : செப் 16, 2020
Share
Advertisement

ஜெனிவா:'பயங்கரவாதத்தின் மையமாக உள்ள பாகிஸ்தானுக்கு, மனித உரிமைகள் பற்றி பேச, எந்த தகுதியும் இல்லை' என, இந்தியா உறுதிபட தெரிவித்து உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமை கவுன்சிலின், 45வது கூட்டம், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடந்தது. இதில், பேசிய பாகிஸ்தான. 'ஜம்மு - காஷ்மீரில், மனித உரிமைகள் மீறப்படுகின்றன' என, வழக்கம் போல் ஒப்பாரி வைத்தது. இதற்கு பதில் அளித்து, இந்திய பிரதிநிதி கூறியதாவது:சர்வதேச அளவில், பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் உள்ளது. இதை மறைக்க, பயங்கரவாதத்தால் தாங்களும் பாதிக்கப்பட்டு உள்ளதாக, பாகிஸ்தான் முதலைக்கண்ணீர் வடிக்கிறது.

இந்நாட்டில், சிறுபான்மையினர்களான ஹிந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் பெரும் சித்ரவதைக்கு உள்ளாகி வருகின்றனர். அங்கு அவர்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட மறுக்க பட்டு உள்ளன.அவர்கள் கடத்தப் பட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்படுகின்றனர். இப்படிப்பட்ட நாட்டுக்கு, மனித உரிமை பற்றி பேச, எந்த தகுதியும் இல்லை. சர்வதேச பயங்கரவாதிகளாக, ஐ.நா.,வால் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, பாகிஸ்தானில் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றுவதற்காக, ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருப்பதை, அந்நாட்டு பிரதமரே ஒப்புக் கொண்டுள்ளார்.ஜம்மு - காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இந்த விவகாரத்தில் தலையிடவோ, கருத்து கூறவோ, ஓ.ஐ.சி., எனப்படும், இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு அமைப்புக்கு, எந்த உரிமையும் இல்லை. இவ்வாறு, இந்திய பிரதிநிதி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X