பிற்போக்கு கொள்கை

Added : செப் 16, 2020
Share
Advertisement

பிற்போக்கு கொள்கை

புதிய கல்வி கொள்கை, மிகவும் பிற்போக்கு தனமாக உள்ளது. நமது குழந்தைகளை, எதிர்காலத்துக்கு தயார் செய்யாமல், அவர்களை, 2,000 ஆண்டுகள் பின்நோக்கி அழைத்து செல்லும் விதமாக உள்ளது. பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வி என்பது, அரசிய லமைப்பின் கொள்கைகளுக்கு உகந்ததாக இருக்க வேண்டுமே தவிர, பழமையான கலாசார மதிப்பீட்டின் அடிப்படையில் இருக்க கூடாது.

மல்லிகார்ஜுன கார்கே
ராஜ்யசபா எம்.பி., - காங்கிரஸ்

ஹிந்துக்களுக்கு எதிரான அரசு

அமாவாசை தர்ப்பணம் செய்ய, அனுமதி கோரிய பா.ஜ., தொண்டர் களுக்கு, மேற்கு வங்க போலீசார், அனுமதி மறுத்துள்ளனர். ஆளும் திரிணமுல் காங்., அரசு, 30 சதவீத சிறுபான்மையினரை காப்பதற்காக மட்டுமே செயல்படுகிறது. அங்கு பெரும்பான்மையாக வசிக்கும், 70 சதவீத ஹிந்துக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

கைலாஷ் விஜய்வர்கியா

பா.ஜ., மூத்த தலைவர்

அரசுக்கு துணை நிற்போம்

எல்லையில், சீனாவுடன் நிலவி வரும் மோதல் போக்கு காரணமாக, பதற்றமான சூழல் உள்ளது. இந்த விவகாரத்தில், சீனாவுக்கு, நம் படையினர், தக்க பதிலடி தருவர் என்பதில், பகுஜன் சமாஜ் கட்சி, மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது. மத்திய அரசு மற்றும் ராணுவத்துடன், எங்கள் கட்சி, என்றுமே துணை நிற்கும்.
மாயாவதி

தலைவர், பகுஜன் சமாஜ் கட்சி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X