பொது செய்தி

இந்தியா

கொரோனா பாதிப்பில் இருந்து 39.42 லட்சம் பேர் மீண்டனர்

Added : செப் 16, 2020
Share
Advertisement

புதுடில்லி:கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, நேற்று, 50 லட்சத்தை கடந்துள்ளது. இவர்களில், 39.42 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

கொரோனா தொற்றினால், பாதிக்கப்பட்டோரை கண்டறிய, நேற்று வரை, 5.94 கோடி பேரிடம் பரிசோதனைகள் நடந்துள்ளதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.நேற்று மட்டும், 11.17 லட்சம் பேருக்கு பரிசோதனைகள் நடந்துஉள்ளன.இதன் முடிவில், 90 ஆயிரத்து, 123 பேருக்கு, வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இவர்களுடன், தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை, 50 லட்சத்து, 20 ஆயிரத்து, 359 ஆக உயர்ந்துள்ளது.சிகிச்சைஇவர்களில், 9.96 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இது, பாதிப்பில், 19.84 சதவீதமாகும். தொற்றில் இருந்து, நேற்று வரை, 39 லட்சத்து, 42 ஆயிரத்து, 360 பேர் குணமடைந்துள்ளனர்.கடந்த, 24 மணி நேரத்தில், வைரஸ் பாதிப்பால், 1,290 பேர் உயிரிழந்து உள்ளனர்.இவர்களில், மஹா.,வில், 515 பேரும், கர்நாடகாவில், 216; உ.பி.,யில், 113; பஞ்சாபில், 90; ஆந்திராவில், 69; தமிழகத்தில், 68; மே., வங்கத்தில், 59; டில்லியில், 36 பேரும் இறந்துள்ளனர்.

இவர்களுடன், கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை, 82 ஆயிரத்து, 66 ஆக அதிகரித்து உள்ளது. மொத்த பலியில், 30 ஆயிரத்து, 409 பேருடன் மஹா., முதலிடத்தில் உள்ளது. தமிழகம், 8,502 பேருடன் இரண்டாம் இடத்திலும், கர்நாடகம், 7,481 பேருடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


50 லட்சம்



வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை எட்டுவதற்கு, 110 நாட்கள் ஆயின. இந்த எண்ணிக்கை, 59 நாட்களில், 10 லட்சத்தையும், 21 நாட்களில், 20 லட்சத்தையும் எட்டியது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 30 லட்சத்தை அடைய, மேலும், 16 நாட்கள் ஆயின. அடுத்து, 13 நாட்களில், 40 லட்சத்தை எட்டிய பாதிப்பு எண்ணிக்கை, 11 நாட்களில், 50 லட்சத்தை கடந்து உள்ளது.


'இதுவும் கடவுளின் செயலோ'



கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 50 லட்சத்தை கடந்துள்ளது. ஒரே நாள் தொற்று எண்ணிக்கை மற்றும் இறப்பிலும் நாம் மற்ற நாடுகளை முந்தி, முதலிடத்தில் உள்ளோம். வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் பொறுப்பை தட்டிக்கழிக்க, மத்திய அரசு, இதுவும், கடவுளின் செயல் என, கூறுமோ.
ரந்தீப் சுர்ஜேவாலா

தலைமை செய்தித் தொடர்பாளர், காங்கிரஸ்


தடுப்பூசி பரிசோதனைக்கு அனுமதி

ஐரோப்பிய நாடான பிரிட்டனின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து, கொரோனா தடுப்பூசிக்கான இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை, நம் நாட்டில் 'சீரம்' நிறுவனம் மேற்கொண்டது.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட தன்னார்வலர் ஒருவரின், உடல் நலன் பாதிக்கப்பட்டதால், இந்த பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், சீரம் நிறுவனம் மீண்டும் பரிசோதனைகளை தொடங்க, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல், டாக்டர் வி.ஜி.சோமானி அனுமதி அளித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X