பொது செய்தி

இந்தியா

உலகின் நீளமான சுரங்கம் 10 ஆண்டுகளில் நிறைவு

Added : செப் 16, 2020
Share
Advertisement

மணாலி:ஹிமாச்சல பிரதேசத்தில், இரு நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில், உலகின் மிக நீளமான சுரங்கப் பாதை, 10 ஆண்டுகளில் முடிவுக்கு வந்து உள்ளது.

ஹிமாச்சல பிரதேசத்தில், முதல்வர், ஜெய்ராம் தாக்கூர் தலைமையில், பா.ஜ., அரசு அமைந்து உள்ளது.இம்மாநிலத்தின் மணாலியில் இருந்து, லே நகருக்கு செல்லும் நெடுஞ்சாலையில், 10 ஆயிரம் அடி உயரத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது, உலகிலேயே, நெடுஞ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள, மிக நீளமான சுரங்கம் ஆகும்.

இது குறித்து, இப்பணிகளின் தலைமை பொறியாளர், கே.பி.புருஷோத்தமன் கூறிய தாவது:இந்த சுரங்கப்பாதை, ஆறு ஆண்டுகளுக்குள் உருவாக்க திட்டமிட்டு, 10 ஆண்டுகளில் முடிக்கப் பட்டு உள்ளது. இதனால், மணாலியில் இருந்து லே செல்லும் துாரத்தில், 46 கி.மீ., குறைவதுடன், நான்கு மணி நேர, பயண நேரம் சேமிக்கப்படும்.'அடல்' என, பெயரிடப்பட்டுள்ள இந்த சுரங்கப் பாதையில், ஒவ்வொரு, 60 மீட்டர் இடைவெளியில் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. ஒவ்வொரு, 500 மீட்டர் துாரத்திலும், அவசர கால வெளியேறும் வழி அமைந்துள்ளது.

சுரங்கப்பாதையின் அகலம், 10.5 மீ., என்ப துடன், இருபுறமும் தலா, 1 மீட்டர் அகல நடைபாதை உள்ளது. சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை, பல்வேறு சிரமங்களுக்கு இடையே, வெற்றிகரமாக முடித்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X