பொது செய்தி

தமிழ்நாடு

எல்லையில் 'டூப்ளிகேட்!' இரு மாநிலங்களிலும் வாக்காளரா?கண்டுபிடித்து ரத்து செய்ய தீவிரம்

Added : செப் 16, 2020
Share
Advertisement
 எல்லையில் 'டூப்ளிகேட்!' இரு மாநிலங்களிலும் வாக்காளரா?கண்டுபிடித்து ரத்து செய்ய தீவிரம்

ஆனைமலை:பொள்ளாச்சி வருவாய் கோட்டம், தமிழக - கேரள எல்லையில் உள்ளதால், எல்லையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பலருக்கு, இருமாநிலங்களில் ஓட்டுரிமை உள்ளது. இதனை, வாக்காளர் அடையாள அட்டை அடிப்படையில் கண்டறிந்து போலியை ரத்து செய்யும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு சட்டசபை தொகுதிகளில், சோலையாறு, செமணாம்பதி, கோவிந்தாபுரம், மீனாட்சிபுரம், கோபாலபுரம் உள்ளிட்ட பல கிராமங்கள், தமிழக - கேரள எல்லையில் உள்ளன. இக்கிராமங்களில் வசிப்போரில் பலருக்கு, இரு மாநிலங்களிலும் ஓட்டுரிமை, வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்துள்ளனர்.சட்ட விரோதமாக இரு மாநிலங்களிலும் ஓட்டுப்போடுவதுடன், அரசு திட்டங்களில் இரண்டு மாநிலங்களிலும் பயன்பெறுகின்றனர். ஒரு இடத்துக்கு மேல் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்களை கண்டறிந்து ரத்து செய்ய, இரண்டு ஆண்டுக்கு முன் ஆதார் எண் இணைப்பு செய்யப்பட்டது.ஆனால், வழக்கு காரணமாக ஆதார் இணைப்பு பணி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், தகவல்களின் அடிப்படையில், இருமாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்போரை கண்டறியும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.ஆனைமலை தாலுகா தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:புதியதாக பதிவு செய்யும் வாக்காளர்களிடம், வேறு பகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டை இருக்கிறதா என்ற விபரத்தை கேட்டு, மற்ற பகுதிகளில் இருக்கும் ஓட்டுரிமையை ரத்து செய்கிறோம். இந்த போலி வாக்காளர்களை களைய, தற்போது, 'டெமாகிரேடிக் சிமிலியர் என்ட்ரீஸ்' (டி.எஸ்.சி.,) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதன் வாயிலாக, கணினி உதவியுடன், வாக்காளரின் பெயர், வயது, அப்பா பெயர், பிறந்த தேதியை அடிப்படையாக வைத்து, நாட்டின் எத்தனை பகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டை உள்ளது என கண்டறியும் பணி நடந்து வருகிறது.
விரைவில் இப்பணி முடித்து, ஏதேனும் ஒரு பகுதியில், ஓட்டுரிமையும், வாக்காளர் அடையாள அட்டையும் ரத்து செய்யப்படும். அதற்கு முன்பே, மக்களே தாங்களாக முன்வந்து ரத்து செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.இனி, தப்ப முடியாது!ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்திருப்போர், https://www.nvsp.in என்ற இணையதளம் அல்லது அந்தந்த தாலுகா அலுவலகத்தை அணுகி, கூடுதலாக வைத்துள்ள அட்டையை ரத்து செய்து கொள்ளலாம்.
இரண்டு மாநிலங்களில், ஓட்டுரிமை, வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது தண்டனைக்குறிய குற்றமாகும். அதிகபட்சமாக, ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம், அல்லது இரண்டு சேர்த்து விதிக்கப்படும், என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X