பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வருக்காக கலெக்டர் அலுவலகம் பொலிவு

Added : செப் 16, 2020
Share
Advertisement

விருதுநகர் : முதல்வர் வருகையையொட்டி விருதுநகர் கலெக்டர் அலுவலகம் புனரமைக்கப்பட்டு புது பொலிவு பெற்று வரும் நிலையில் அதே வளாகத்தில் உள்ள சிதிலமாகும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக கட்டடத்தை கண்டுக்காது விட்டுள்ளனர்.

தேர்தல் நேரம் வந்தால் ஆட்சியாளர்கள் செயல்படுவது போல் முதல்வர் வந்தால் தான் கட்டடங்களும் பொலிவுபெறும் போலும். அந்த வகையில் கொரோனா ஆய்வு பணிக்காக செப். 23ல் முதல்வர் பழனிசாமி விருதுநகர் வருகிறார். இதற்காக கலெக்டர் அலுவலகம் புத்துயிர் பெற்றுள்ளது. கலெக்டர் அறை, கூட்டம் நடக்கும் அறை, முதல்வர் வரும் பகுதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. அதே வேளையில் இங்குள்ள பாழாகிவரும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக கட்டடத்தை யாரும் கண்டுக்காது விட்டுள்ளனர்.

இதன் அலுவலகம் வரும் ரோடுகளும் மோசமான நிலையில் உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் வேறுபட்ட பார்வையால் கல்வி அலுவலக அலுவலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X