பொது செய்தி

தமிழ்நாடு

நேரடி நெல் நடவுக்கு தயாராகும் விவசாயிகள்: 50 சதவீத மானியத்தில் உரங்கள்

Added : செப் 16, 2020
Share
Advertisement
 நேரடி நெல் நடவுக்கு தயாராகும் விவசாயிகள்: 50 சதவீத மானியத்தில் உரங்கள்

உடுமலை:உடுமலை அமராவதி அணையிலிருந்து, பழைய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, கல்லாபுரம், ராமகுளம் கால்வாயிலுள்ள, 2,800 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நெல் நடவு செய்வதற்காக, உழவு, பரம்பு ஓட்டுதல் என முன்னேற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். நெல் சாகுபடியில், நாற்றங்கால் அமைத்து, குறிப்பிட்ட நாட்களுக்கு பின், நாற்றுக்கள் எடுத்து நடவு செய்யப்படும் முறை உள்ளது.
தற்போது, நேரம், சாகுபடி செலவை குறைக்கும் வகையில்,இயந்திரம் மூலம் நேரடி நெல் நடவு செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக, வயல்களில், உழவு, பரம்பு ஓட்டி, சமன் செய்து, தண்ணீர் தேக்கி வைத்துள்ளனர். நடவின் போது, தண்ணீர் வடித்து, இயந்திரம் மூலம், நெல் விதைகள் நேரடியாக நடவு செய்யப்பட உள்ளது. வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:நேரடி முறையில் நெல் நடவு செய்ய, இயந்திரம் தருவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆட்கள் கூலி, விதை விரையம், ஒரே சீரான வளர்ச்சியில் நாற்றுக்கள், அறுவடையின் போது எளிது மற்றும் அதிக மகசூல் கிடைக்கிறது.
விவசாயிகளுக்கு, சாகுபடி காலம், 105 நாட்களை கொண்ட, கோ,51 மற்றும் 110 நாட்களை கொண்ட, ஏ.டி.டி.,41 ஆர்.,ஆகிய ரகங்கள் பரிந்துரை செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு தேவையான விதை நெல், வேளாண் துறை மூலம், 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.நெல்லுக்கான நுண்ணுாட்டச்சத்து, அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிர் உரங்கள், நோய் தாக்குதலை தடுக்கும் மருந்துகள், 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. வேளாண் அலுவலகத்தில் விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X