பொது செய்தி

தமிழ்நாடு

கோவிலை புதுப்பிக்க வலியுறுத்தல்

Added : செப் 16, 2020
Share
Advertisement
 கோவிலை புதுப்பிக்க வலியுறுத்தல்

மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே, கடத்துாரிலுள்ள கொங்குனீஸ்வரர் கோவில் மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. கோவிலை புதுப்பிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் கூறியதாவது: சோழ மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் கோவில் கட்டப்பட்டது. மன்னர் ஆட்சி முறை, கோவிலுக்கு வழங்கப்பட்ட தானங்கள் மற்றும் பல அரிய தகவல்கள் கோவில் சுவர்களில் கல்வெட்டுகளாக உள்ளன.பராமரிப்பின்றி கோவிலின் வலது பக்க சுவர் பெரும்பகுதி இடிந்து விழுந்து விட்டது. மேற்கூரையும் ஆபத்தான நிலையில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க நினைவுச் சின்னமாக உள்ள இந்த கோவிலை புதுப்பிக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.இந்து சமய அறநிலையத் துறையினர் கூறுகையில், 'கோவில் குறித்து தொல்லியல் துறையினரிடம் ஆய்வறிக்கை பெற்று, மண்டல கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்குப் பின், இந்த கோப்புகளை மாநில அளவிலான கமிட்டிஅதிகாரிகள் ஆய்வுசெய்து, துறையின் உயர்நிலை அதிகாரிகளிடம் அளிப்பர். அரசு நடைமுறைக்கு பின்பு, இதற்கான நிதியை பெறுவார்கள். நிதி பெற்ற பின்பு கோவில் பராமரிப்பு வேலைகள் தொடங்கும். இதற்கான பணிகள்தீவிரமாக நடக்கிறது'என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X