சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதியவர்களை தவிக்கவிட்ட பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்

Added : செப் 16, 2020
Share
Advertisement

காரியாபட்டி : காரியாபட்டி அருகே முதியவர்களை மனிதாபிமானமின்றி நடுவழியில் இறக்கிவிட்டு சென்ற அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கல்குறிச்சியை சேர்ந்த முதியவர்கள் சங்கரகுமார், சங்கரன். மேட்டுப்பாளையம் சென்ற அரசு பஸ்சில் ஏறினர். டிக்கெட் எடுக்க பணத்தை எடுத்தபோது 500 ரூபாயை சங்கரகுமார் தவற விட்டார். 50 மீட்டர் துாரத்தில் பஸ்சை நிறுத்தினார். ரூபாயை எடுத்து வருவதற்குள் பஸ்சை எடுத்து சென்றுவிட்டனர். நடு வழியில் தவித்த இவர்கள் குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பஸ் கண்டக்டரான கோவிலாங்குளத்தை சேர்ந்த ராம் சங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அருப்புக்கோட்டை டெப்போ மேலாளர் சீனிவாசன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X