பொது செய்தி

தமிழ்நாடு

தனிநபர் கழிப்பிட திட்டத்தில் விடுபட்ட பயனாளிகள் சேர்ப்பு

Added : செப் 16, 2020
Share
Advertisement

உடுமலை:உடுமலை, ஒன்றியத்தில், தனிநபர் இல்லக்கழிப்பிட திட்டத்தில் விடுபட்ட பயனாளிகள், மீண்டும் திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது.கிராம ஊராட்சிகளின் முழு சுகாதாரத்தை மேம்படுத்தவும், நுாறு சதவீதம் திறந்த வெளிக்கழிப்பிடம் இல்லாத நிலையை உருவாக்குவதற்கும், தனிநபர் இல்லக்கழிப்பிட திட்டத்தை அரசு செயல்படுத்தியது.இத்திட்டத்தின்படி, ஊராட்சிகளில் உள்ள குடியிருப்புகள் எண்ணிக்கை கணக்கெடுப்பு நடத்தி, கழிப்பிடங்கள் அரசின் சார்பில் அமைப்பதற்கு மானியத்தொகையும் வழங்கப்படுகிறது.கழிப்பிடம் அமைப்பதற்கு, மானியத்தொகையாக 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெறுவதற்கு, மகளிர் குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.தற்போது, 2014ம் ஆண்டு நடத்திய கணக்கெடுப்பில் விடுபட்டவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பயனாளிகளாக திட்டத்தில் சேர்க்க, அரசுக்கு பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது.இதன்படி, உடுமலை ஒன்றியத்தில், விடுபட்டவர்களின் பட்டியலாக, 147 பயனாளிகளுக்கு திட்டத்தில் பயன்பெற, விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X