பொது செய்தி

தமிழ்நாடு

ரசாயன பயன்பாடின்றி தக்காளி சாகுபடி: வழிகாட்டும் தோட்டக்கலை துறை

Added : செப் 16, 2020
Share
Advertisement
 ரசாயன பயன்பாடின்றி தக்காளி சாகுபடி: வழிகாட்டும் தோட்டக்கலை துறை

பொள்ளாச்சி:தக்காளி சாகுபடியில் ரசாயன இடுபொருட்களை தவிர்ப்பதால், சாகுபடி செலவை சிக்கனம் செய்யலாம் என, தோட்டக்கலை துறை தெரிவித்துள்ளது.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், கிணத்துக்கடவு பகுதிகளில் தக்காளி அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. தக்காளி பயிரில் பூச்சிக்கட்டுப்பாடு மற்றும் உரத்துக்கு விவசாயிகள் அதிகம் செலவு செய்கின்றனர்.ரசாயன பயன்பாடு இன்றி இடு பொருள் செலவை குறைத்து, தக்காளி சாகுபடி செய்ய தோட்டக்கலை துறை வழிகாட்டியுள்ளது.நிலத்தை உழவு செய்யும் போது, ஒரு ஏக்கருக்கு மக்கிய தொழு உரம், 10 டன் இடவேண்டும். ஒரு ஏக்கருக்கு அசோஸ்பைரில்லம் இரண்டு கிலோ, பாஸ்போபாக்டீரியா இரண்டு கிலோ, டிரைக்கோடெர்மா விரிடி இரண்டு கிலோ இவற்றை, 200 கிலோ மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரத்தில் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.அவற்றில் ஒரு கிலோ நாட்டு சர்க்கரையை தண்ணீரில் கரைத்து, அந்த தண்ணீரை உயிர் உரக்கலவையில் தெளித்து நன்கு கலக்கி, நிழல்பகுதியில் ஒருவாரம் வரை வைத்திருக்க வேண்டும். அதன்பின் பாத்தியில் உள்ள பார்களில் நாற்றுக்களை நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.நடவு முறைநாற்றுக்களை அசோஸ்பைரில்லம், டிரைக்கோடெர்மா விரிடி இவற்றை ஒரு லிட்டர் தண்ணீருக்கு தலா, 10 கிராம் எடுத்து, சூடாறிய அரிசி கஞ்சியில் கலந்து நாற்றின் வேர்ப்பாகத்தை இவற்றில் நனைத்து, பாருக்கு பார், 3 அடியும், 2 அடி இடைவெளியில் செடிகள் நடவு செய்ய வேண்டும்.பூஞ்சாணம் தாக்கப்பட்ட பழங்களை அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும். பயிர் நடவு செய்த, 25 நாட்களுக்கு மேல் செடி ஆங்காங்கே வாடி காய்ந்து விடும். இதை இயற்கை முறையில் கட்டுப்படுத்த நடவு செய்த ஒரு வாரத்திற்கு பிறகு, 50 கிலோ மக்கிய தொழு உரம் துாவ வேண்டும்.பயிர் பாதுகாப்புவேம்பு எண்ணெய், 3 சதவீதம், வேப்ப விதை பருப்புச் சாறு, 5 சதவீதம் என்ற அளவில் தெளித்து பூச்சி பரவுதலை தடுக்க வேண்டும். புள்ளியிட்ட அழுகல் வைரசை தடுக்க, 10 சதவீத சோள இலைச்சாறு அல்லது தேங்காய்ச்சாறு, 15 நாள் இடைவெளியில் தெளிப்பதன் மூலம் வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்க முடியும்.சாமந்திப்பூ ஊடுபயிராக சாகுபடி செய்து, தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். ஆமணக்கு பயிரை வரப்பு ஓரங்களில் வளர்த்து காய்ப்புழுக்களை கவர்ந்து கட்டுப்படுத்தலாம்.இனக்கவர்ச்சி பொறி ஒரு ஏக்கருக்கு ஐந்து இடத்தில் வைத்து, ஆண் அந்துப்பூச்சியை கவர்ந்து அழிக்கலாம். இஞ்சிப் பூண்டு பச்சை மிளகாய் கரைசல் ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 10 மில்லி அளவு கலந்து தெளிக்கலாம்.இவ்வாறு, தோட்டக்கலை துறை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X