சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெரிய கண்மாய் ஆக்கிரமிப்பு செப்.25ல் கடையடைப்பு

Added : செப் 16, 2020
Share
Advertisement

சாயல்குடி : சாயல்குடி பெரியகண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி செப்.25ல் போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

சாயல்குடியில் பாசனவிவசாய சங்கம், வணிகர்சங்கம், வாகன ஓட்டுனர் உரிமையாளர்கள் சங்கம், அனைத்துகட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடந்தது.பாசன விவசாய சங்க தலைவர் செல்லப்பாண்டியன் கூறியதாவது:சாயல்குடி பெரிய கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். கண்மாய் இடத்தை தனிநபருக்கு அளவீடு செய்ய உத்தரவிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்., 25ல் சாயல்குடியில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது, என்றார்.

கூட்டத்தில் சக்கரவர்த்தி, முன்னாள் பேரூராட்சி தலைவர் முகம்மது ஜின்னா, ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜாராம் உட்பட பலர் பங்கேற்றனர். பாசன விவசாயிகள் சங்க நிர்வாகி சம்சுகனி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X