பொது செய்தி

தமிழ்நாடு

தெப்பக்குளம் அருகே மரம் மறுநடவு

Added : செப் 16, 2020
Share
Advertisement
 தெப்பக்குளம் அருகே மரம் மறுநடவு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி தெப்பக்குளம் அருகே, மரத்தின் வேருடன் கூடிய அடிப்பகுதியை தன்னார்வலர்கள் பாதுகாப்பாக எடுத்து வந்து மறு நடவு செய்தனர்.பொள்ளாச்சி பகுதியில், மரங்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. மரக்கன்றுகள் நடவு, மரங்கள் வளர்ப்பு உள்ளிட்ட பணிகளில், பல்வேறு தன்னார்வ அமைப்புகள் மற்றும் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.தற்போது, ரோடு விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளின் போது, மரங்களை மாற்று இடத்தில் நடவு செய்யும் பணியில் தன்னார்வலர்கள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.இந்நிலையில், பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில் திருமண மண்டபம் அருகே இருந்த, 10 வயதுள்ள இரண்டு மரமல்லி மரங்களை, வேருடன் தோண்டி, மாற்று இடத்தில் மறு நடவு செய்ய தன்னார்வலர்கள் திட்டமிட்டனர்.பொள்ளாச்சி நீர்நிலைகள் புனரமைப்பு குழு, வாசவி கிளப், வனிதா கிளப் சார்பில் மரத்தின் வேருடன் கூடிய அடிப்பகுதி மட்டும் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு, தெப்பக்குளம் அருகே மறு நடவு செய்யப்பட்டது.தன்னார்வலர்கள் கூறுகையில், 'மரத்தை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில், மரத்தின் அடிப்பாகத்தை வேருடன் நடவு செய்துள்ளோம். இது நன்றாக பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X