சம்பவம் செய்தி

தமிழ்நாடு

---கிசான் திட்டத்தில் ரூ.1.06 கோடி முறைகேடு 3500 பேர் வங்கி கணக்குகள் முடக்கம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கும் உதவித்தொகையில் ரூ.1.06 கோடி முறைகேடு நடந்துள்ளது. 3500 பேரின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிரதமரின்கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உதவித்தொகையாக 2018 பிப்ரவரி முதல் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் மூன்று தவணையாக வங்கிகணக்கில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் விவசாயிகள் அல்லாதவர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டு ரூ.110கோடி வரை முறைகேடு நடந்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,05,000 பேர் பயன்பெறுகின்றனர். முறைகேடு குறித்து விசாரிக்க கலெக்டர் வீரராகவ ராவ் உத்தரவுப்படி 11 ஒன்றியங்களில் 113 பேர் அடங்கிய வேளாண் குழுவினர் களப்பணியில் உள்ளனர்.

பரமக்குடி, சாயல்குடி, கடலாடி, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் ஒரே குடும்ப உறுப்பினர்கள், வெளிமாவட்ட நபர்கள்பெயரில் 3500 க்கும் மேற்பட்டவர்கள் முறைகேடாக பதிவு செய்து மொத்தம் ரூ.1கோடியே 6 லட்சம் வரை பணம் பெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.இதில் ராமேஸ்வரம் மீனவர்கள் சிலர் உட்பட இதுவரை மொத்தம் ரூ.42 லட்சம் திரும்பப் பெறப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்து உள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.-------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X