பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி அலுவலகங்களில் கண்காணிப்பு கேமரா: உடுமலை ஒன்றியத்தில் பணிகள் துவக்கம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

உடுமலை:உடுமலை ஒன்றியத்தில், ஊராட்சி நிர்வாக அலுவலகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி துவக்கப்பட்டுள்ளது.உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளோடு, பொதுமக்களின் பாதுகாப்புக்கும், உள்ளாட்சி நிர்வாகங்கள் பொறுப்பாகின்றன.இதன் அடிப்படையில், அனைத்து தெருக்களிலும், பொதுமக்கள் அச்சமில்லாமல் நடமாட, தெருவிளக்குள் அமைப்பதற்கு, தொடர்ந்து கோரிக்கை வைக்கின்றனர்.சில பகுதிகளில், இன்னும் தெருவிளக்குகள் இல்லாமல் பொதுமக்கள் மாலை நேரங்களில், அவசர தேவைக்கும் வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளது.பொதுமக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், உடுமலை ஒன்றியத்தில் ஊராட்சி நிர்வாக அலுவலகங்களில், கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போலீசார் அறிவுறுத்தல் படி, ஊராட்சி அலுவலகங்கள் தவிர, கிராமங்களில் முக்கிய பகுதிகளிலும், கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு, ஊராட்சி நிர்வாகங்கள் பட்டியல் தயார் செய்து வருகின்றன. முதற்கட்டமாக, ஆண்டியகவுண்டனுார் ஊராட்சி அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளனர்.ஒன்றிய அலுவலர்கள் கூறுகையில், 'ஒன்றிய அலுவலகத்தில் ஏற்கனவே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. தற்போது அனைத்து ஊராட்சி அலுவலகங்களிலும், பொருத்துவதற்கு அரசு உத்தரவிட்டதன் அடிப்படையில், ஊராட்சி நிர்வாக நிதியிலிருந்து, இப்பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆண்டியகவுண்டனுாரில், தன்னார்வலர்கள் மூலம், கூடுதல் தொகையை பயன்படுத்தி, ஊராட்சிக்குட்பட்ட சில முக்கிய பகுதிகளிலும், கேமரா பொருத்தி வருகின்றனர்,'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X