பொது செய்தி

தமிழ்நாடு

கிளை நுாலகத்தில் மாணவர்களுக்கு பரிசளிப்பு

Added : செப் 16, 2020
Share
Advertisement

உடுமலை:உடுமலை, இரண்டாம் கிளை நுாலகத்தில், இன்று நடக்கும் விழாவில் பங்கேற்கும் மாணவர்கள், முகக்கவசத்துடன் வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.உடுமலை இரண்டாம் கிளை நுாலகத்தில், ஈ.வெ.ரா., மற்றும் அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி, பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு, போட்டிகள் அறிவிக்கப்பட்டது. கவிதை, கட்டுரை, ஓவியம், உள்ளிட்ட போட்டிகள் நடந்தது.போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுகள் இன்று வழங்கப்பட உள்ளது. இதனால், மாணவர்கள் கூட்டமாக நுாலகத்துக்கு வர வாய்ப்புள்ளது. மாணவர்களின் பாதுகாப்புக்காக, தவறாமல் முகக்கவசம் அணிந்து வருவதற்கும், சமூக விலகலை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் எனவும் நுாலகர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X