பொது செய்தி

தமிழ்நாடு

உரத்திற்காக கொழுஞ்சி செடிகள் சேகரிப்பு

Added : செப் 16, 2020
Share
Advertisement

மானாமதுரை : மானாமதுரையில் சமீபத்திய மழையால் பெருகியுள்ள கொழுஞ்சி செடிகளை உரத்திற்காக விவசாயிகள் சேகரித்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் செப்டம்பரில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். இந்தாண்டு சரிவர மழை பெய்யவில்லை என்றாலும் பம்ப்செட் விவசாயிகள் நாற்றங்கால் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.நாற்றங்காலில் இயற்கை உரத்திற்காக கொழுஞ்சி செடியை போட்டு உழவு செய்வது வழக்கம். சமீபத்திய மழையால் மானாமதுரை-சிவகங்கை ரோட்டின் இருபுறமும் ஏராளமான கொழுஞ்சி செடிகள் வளர்ந்துள்ளன. அவற்றை கல்குறிச்சி பகுதி விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர்.

விவசாயி கல்குறிச்சி ராஜலட்சுமி கூறுகையில், நாற்றங்கால் அமைப்பதற்கு இயற்கை உரம் இடுவது வழக்கம், கொழுஞ்சி செடி நல்ல உரம், அதற்காக அறுவடை செய்து கொண்டு செல்கிறோம், இன்னும் இருநாட்களில் நாற்றங்கால் அமைக்க வேண்டும், இரண்டு ஏக்கரில் நெல் நடவு செய்ய உள்ளேன், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X